புகையிலை ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை
இந்தியாவில் புற்றுநோயின் தலைநகரமாக மிசோரம் விளங்குகிறது. அம்மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2004 இல் புற்றுநோயின் காரணமாக 593 பேர் இறந்ததாகவும் (இது அம்மாநிலத்தில் நடந்த மொத்த மரணத்தில் 12.72%), 2005இல் அது 618 ஆக (மொத்த மரணத்தில் 13.18%) உயர்ந்ததாகவும் கூறுகிறது. 2006, 2007, 2008ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மொத்த மரணங்களில் புற்றுநோய் மரணங்கள் முறையே 12.82%, 13.08% மற்றும் 11.71%. எம்.பி.பி.சி.ஆர். என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யின்படி, அம்மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 23.1% பேர் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஐஸ்வால் சிவில் மருத்துவ மனையின் நோய்க்குறியியல் துறையின் தலைமை மருத்துவர் எரிக் ஸோமாவியா கூறும் போது தொண்டை புற்றுநோய், நாக்குப் புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் ஆகியவற்றாலேயே மிசோரமில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். 2003 மற்றும் 2008 காலகட்டத்தில் மேலும் 6748 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட் டிருப்பது தெரியவந்ததாகவும், 3,302 பேர் புற்றுநோயால் இறந்ததாகவும் எம்.பி.பி.சி.ஆர் தெரிவிக்கிறது. 2003&04இல் ஒரு லட்சம் பேரில் 194.5 ஆண்களும், 155.7 பெண்களும் புற்றுநோயின் தீவிர பாதிப்பிற்கு ஆளாகியிருப்பதாகவும் 2007&08இல் இது ஆண்களில் 180.0 ஆகவும், பெண்களில் 156.0ஆகவும் உயர்ந்துள்ளதா கவும் எம்.பி.பி.சி.ஆர் தெரிவிக்கிறது.இந்த அளவிற்கு புற்றுநோய் அதிகரித்திருப் பதற்குக் காரணம் அம்மக்களின் வாழ்க்கை முறையே. அதிக அளவிலான புகையிலை நுகர்வு (புகைத்தல் மற்றும் மெல்லுதல்), புகையூட்டப்பட்ட இறைச்சியை அதிக அளவில் உட்கொள்ளுதல் ஆகியவை இதற்கான காரணங்களாகும். இதை ஐஸ்வால் சிவில் மருத்துவமனையில் புகையிலை தடுப்பு கிளினிக்கின் தலைமை மருத்துவர் ஜேன் ஆர் ரால்டே உறுதிபடுத்துகிறார். மிசோரமில் 22.1% பெண்கள் புகைப்பதாக அவர் கூறுகிறார். தேசிய அளவில் இது வெறும் 2.5%. வடகிழக்கில் உள்ள பிற மாநிலங்களிலும் நிலைமை நன்றாக இல்லை என்கிறார் தசஇ&யிடம் பேசிய டாக்டர் மிருண்மாய் பருவா. மிசோரமில் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆளாகும் நோயாளி களில் 40% பேர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக இவர் கூறுகிறார்.

நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கைகள் சிலவற்றை அரசு இம்மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டும். புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்துவது அதில் முதலாவதாகும். புகையிலை நுகர்வின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கை யும் எடுத்ததாகத் தெரியவில்லை. இம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரும் மிசோ தேசிய முன்னணியின் பிரபல தலைவருமான லால்டெங்கா புற்றுநோயால் மரணமடைந்தது ஆச்சர்யத்திற்குரியது அல்ல.
நன்றி : The Sunday Indian
