Thursday 28 April 2011

வருடத்தில் 27 நாட்கள் இறைச்சி விற்ப்பனைக்கு தடை .! ஆந்திர அரசு

         ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் அரசு

ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை கோட்பாடுகள், சடங்குகள்- சம்பிரதாயங்கள் இருக்கலாம் அது தவறென்று கூறமுடியாது. ஆனால் ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல. அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் பிரதிநியான அரசே அத்தகைய செயலை முன்னின்று செய்வது புரியாத புதிராக உள்ளது. சில  மத  குருமார்கள் புலால் உண்ணாமை கொள்கையை கொண்டவராக இருந்திருக்கலாம். அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் அந்த தினத்தன்று புலால் உண்ணாமல் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை யாரும் தடுக்கமுடியாது. அதே நேரத்தில் மகாவீர்,  மகாசிவராத்திரி ,  விநாயக சதுர்த்தி, ராம நவமி, க்ரிஷ்ணசதமி, மகாவீர் ஜெயந்தி,  புத்த  பூர்ணிமா ,  குருநான பிறந்த நாள் , Parushan Festival, போன்ற பண்டிகைகள்  இல்லாமல்  இந்திய  அரசு  அங்கிகரித்த நாட்கள் மற்றும் பிரதி சனிக்கிசமை போன்ற  தினத்தன்று ஒட்டுமொத்தமாக இறைச்சிகள் வெட்டவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதிப்பது ஒருவரின் கோட்பாட்டை மற்றவர் மீது திணிப்பதற்கு ஒப்பாகும். மேலே குறிப்பிட்ட நாட்களில் அரசு உத்தரவின்படி பலமேநேர்  நகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள்  சர்குலரில் குரிப்பிட்டிறிக்கும் தேதிகளில்  மூடப்படும். இதே போல் ஆடு மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்களும் அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மதத்தையும் திருப்தி படுத்துவது அரசின் நோக்கமாக இருக்குமானால், ஒவ்வொரு மதத்தவரும் தமது குருவின் கொள்கையை ஒரு குறிப்பிட்ட நாளில் அமுல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்னாகும் என்பதை அரசு சிந்தித்து பார்க்கவேண்டும். எனவே அரசு இது விஷயத்தில் நல்லமுடிவை எட்டவேண்டும். தமிழகத்தில் ஒரு சதவிகிதம் அளவு வாழும் ஒரு சமுதாயத்திற்காக 99 சதவிகித மக்களையும் அம்மதத்தின் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்று சட்டம் போடுவது அரசின் அறியாமையாகும். இப்படி சட்டம் போடும் அரசு, ரமலான் மாதம் முழுவதும் பகலில் பட்டினி கிடக்கும் முஸ்லிம்களைப் போல் மற்றவர்களும் பட்டினி கிடக்கவேண்டும் என்று கூறுமா? எனவே இதுபோன்ற திணிப்புகளை அரசு கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் காந்தி ஜெயந்தியன்று மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்க்கத்தக்கதே! ஏனெனில் மது மனித குலத்தை நாசமாக்கும் மெல்லக்கொல்லும் விஷமாகும். எனவே காந்தி ஜெயந்தியன்று மட்டும் என்றில்லாமல் பூரண மதுவிலக்கை கொண்டுவர அரசு முயற்ச்சிப்பது தான் காந்திக்கு அரசு செலுத்தும் மரியாதையாகும். அரசு 

Monday 25 April 2011

அரபு எழுச்சி என்பது நாகரிகத்தின் மாற்றம்.

      அமெரிக்கா பல தசாப்தங்களாக இரட்டை நிலைப் பாடுகளைப் பேணிவருகிறது. ஆனாலும் அந்நாடு ஜனநாயகத்தைப் பற்றி பேசி கருத்து சுதந்தரம், முரண்படுதலுக்கான உரிமை மற்றும் மனித உரிமைகள் பற்றி வெட்கமே இல்லாமல் மேடையேறி மற்றொரு நாடுகளுக்கு உரைத்துவருகிறது. உண்மை என்னவெனில் தென் அமெரிக்கா, ஆசியா அல்லது ஆப்பிரிக்கா எந்த இடமாக இருந்தாலும் சரி, மிக மோசமான சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரித்துள்ளது. அந்த சர்வாதிகாரிகள் தங்கள் குடிமக்களையே மிக மோசமான முறையில் சித்திரவதை செய்து கொன்றவர்கள். தென் அமெரிக்காவில் சிலி, வெனிசுலா, அர்ஜெண்டினா, பிரேசில், நிகராகுவா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் இதற்கு சரியான உதாரணங்களாகும்.
ஆசியாவில் தென்கொரியா மற்றும்  இந்தோனேசியா  சிறந்த உதாரணமாகும்.  பாகிஸ்தானும் கூடத்தான். ஏனெனில் பாகிஸ்தானில் அமெரிக்கா தனது இரட்டை நிலைப்பாடுகளை  அப்பட்டமாகக் காட்டியுள்ளது. பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் யூனியன் எதிர்த்தரப்பில் இருந்தபோது, அமெரிக்க உத்திவகுப்பாளர்கள் மோசமான சர்வாதிகாரிகளை ஊக்குவிப்பது என்பது தேவையானதென்றும், கருத்து சுதந்தரம், மனித உரிமைகளைப் பொறுத்தவரையில் அவற்றுக்கு மிகவும் எதிரான கம்யூனிசத்தின் முன்னெடுப்பைத் தடுக்கவேண்டும் என்றும் தர்க்கம் புரிந்தனர். சோவியத் யூனியன் மறைந்தது. இனிமேலும் கம்யூனிசம் பல தசாப்தங்களாக எதிரி என்றிருந்தது இல்லாமல் ஆனது. இதன்மூலம் மற்ற நாடுகளை சர்வாதிகாரிகளிடமிருந்து காப்பாற்றி  ஜனநாயகங்களாக மாற அமெரிக்கா உதவும் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் சோகமான விஷயமாக இந்த நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டு நசுக்கப்பட்டன. பயங்கரவாதத்திற்கு எதிரான  யுத்தம் என்கிற சாக்கில் உலகளாவிய அளவில் மோசமான சர்வாதிகாரிகளை ஊக்குவித்து வளர்க்கத்  தொடங்கியது. ஆமாம். உலகிலுள்ள சர்வாதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் அராபிய உலகில் தான் உள்ளனர். அவர்களின் எண்ணெய் வளங்கள்தான் அமெரிக்காவின் சாய்வுக்குக் காரணம். அதைவிட்டு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேசுவதெல்லாம் வாய்சவடால் தவிர வேறொன்றும் அல்ல.

1979 இல் மேற்கு ஆசியாவில் முதல் மக்கள் போராட்டம் நடைபெற்றபோது இப்பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் பிறந்தே இருக்கமாட்டார்கள். அமெரிக்க உத்திவகுப்பாளர்களுக்கு மத்திய கிழக்கு என்றால் எளிதாகப் புரிந்துவிடும். அமெரிக்காவால் மிகவும் தனிமைப்படுத்தப்பட, தண்டிக்கப்பட,  நசுக்கப்பட விரும்பும் நாடான ஈரானைப் பற்றி பேச விரும்புகிறேன். 1979 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே அந்நாட்டின் ஆட்சியாளர் ஷா, இஸ்ரேலைவிட அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதனால் அந்நாட்டில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் செல்வாக்கு மிகுந்த பிரதமரைக் கவிழ்க்க முயன்ற கலகத்துக்கு அமெரிக்கா மகிழ்ச்சியாக ஆதரவு தெரிவித்து ஷாவை  ஆட்சியில் அமர்த்தி இருந்தது. ஏனெனில் அந்தப் பிரதமர் அமெரிக்காவின் கட்டளைகளுக்குப் பணிய மறுத்தார்.  ஆட்சி செய்த ஷா, மக்களிடம் செல்வாக்கு இல்லாதவராக இருந்தார். அத்துடன் சர்வாதிகாரமாக இரும்புப்பிடியில் சித்திரவதை, சிறைவைப்பு மற்றும் முரண்பட்டவர்களை கொலை செய்வது வரை செய்து ஆட்சியை நடத்தினார். 1978 இல் திடீரென்று ஈரான் நகரங்களில் மக்கள் போராட்டத்துக்குத் திரள ஆரம்பித்தபோதுதான் அமெரிக்காவுக்கு உறைத்தது. அயதுல்லா கொமேனி நாடு திரும்பினார். ஷா ஈரானிலிருந்து தப்பி ஓடியதால் ஈரான் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அப்போதிலிருந்து அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்த ஈரான் தவிர்க்க இயலாத எதிரியாக மாறியது.

துனிசியாவின் குடிமக்கள் ஆர்த்தெழுந்து அமெரிக்க ஆதரவாளராக இருந்த சர்வாதிகாரியைத் தூக்கி எறிந்தது ஏற்கெனவே நடந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அவரும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துனிசியாவை ஆண்டவர். அராபிய நாடுகளில் தாங்கள் வெறுக்கும் சர்வாதிகாரிகளை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக மக்கள் தெருக்களில் திரள்வதைப் பார்க்கும்போது இந்த உணர்வு மீண்டும் எனக்குள் ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் அடக்கப்பட்ட உணர்வுகள் ஒரு வடிகாலைக் கண்டறியும் போது எப்படியிருக்கும் என்பதை எகிப்து காட்டியுள்ளது. அந்நாட்டின் அதிபரான ஹோஸ்னி முபாரக்,- அவரும் அமெரிக்க வளர்ப்புதான்.- முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரம் செய்தவர். அவர்,  தனது மகனை அடுத்த ஆட்சி வாரிசாக நியமிக்க முடிவுசெய்திருந்த போது மக்கள் போராட்ட அலை நாடெங்கும் எழுந்துள்ளது. துனிசியாவில் நடந்த மக்கள் எழுச்சியை விடவும், அராபிய நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு இப்போராட்டம் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளது
எகிப்து தற்போது வாஷிங்டனுக்கு பல துயர இரவுகளைக் கொடுத்துவருகிறது. தற்போது வரை எகிப்திய அரசு அமெரிக்காவுக்கும் அதேபோல இஸ்ரேலுக்கும் தீவிர ஆதரவு நிலையில் உள்ளது. அராபிய உலகத்திலேயே இஸ்ரேலுடன் மனப்பூர்வமாக ராஜாங்க  உறவுகளைக் கொண்டிருக்கும் ஒரே நாடு எகிப்துதான். அத்துடன் எகிப்துதான் மற்ற அராபிய நாடுகளுக்கு தலைமை வகிக்கும் அந்தஸ்திலும் உள்ளது. கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவின் தெருக்களில் நடைபெறும் நிகழ்வுகள் மொத்த அரபு உலக நாடுகள் மீது தாக்கம் செலுத்துகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேலியப் படையினர் புரியும் அட்டூழியங்களை எகிப்து அரசு ஆதரிப்பதை அரபு உலக மக்களும் கோபத்துடன் இன்றுவரை பார்த்துவந்துள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்ட கடிதங்களும் எகிப்திய அரசு பற்றி எந்தப் பிரமைகளும்  அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதைத் தெரிவித்தது. வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலருக்கும் மேலான உதவித்தொகையைப் பயன்படுத்தி தங்களது பிராந்தியக் கொள்கையை நிறைவேற்றும் ஏஜெண்டாக கெய்ரோவைப் பயன்படுத்தியிருப்பது பகிரங்கமாகியுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒடுக்குவதில் அவை நன்கு செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எகிப்திய மக்களின் எழுச்சி, அதிகம் புகழப்பட்ட மேற்கு நாடுகளின் கூட்டாளியாகச் சொல்லப் பட்டவரின் தகுதியின்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. சந்தேகமின்றி அப்பிராந்தியத்தில் உள்ள சர்வாதிகார ஆட்சி நடக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் செய்தி எதிரொலிக்கும்.

எகிப்தில் அரசு தூக்கி எறியப்பட்ட விதம் நிச்சயம் கொடுங்கனவைப் போல டெல் அவிவையும் வாஷிங்டனையும் துரத்தும் என்பதில் அதிசயப்பட ஒன்றுமேயில்லை. எகிப்து சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து துருக்கியைப் போன்று மிதவாத இஸ்லாமியக் கட்சியால் ஆளப்போகும் நாடாக மாற உள்ளது. துருக்கியும் சந்தர்ப்பவசமாக எண்ணெய் வளம் நிறைந்திருக்கும் பகுதியில் உள்ளதால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராக உள்ளது. துருக்கி தற்போது எடுத்துவரும் நிலைப்பாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராகச் செல்கிறது. இஸ்ரேல் விதித்த  தடையால் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையே கேள்விக்குள்ளான நிலையில், துருக்கி அம்மக்களுக்கு உதவ ஒரு கப்பலை அனுப்பியது. அந்தக் கப்பலை இஸ்ரேலியப் படையினர் தாக்கி அழித்தனர். அதில் துருக்கியர்கள் மட்டுமின்றி பாலஸ்தீன மக்களுக்கு உதவப்போன அமெரிக்கக் குடிமக்களும் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவில் திருப்பம் ஏற்பட்டது. ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய துருக்கி உருவாகும் என்ற நம்பிக்கைகளையும் பலர் இந்த நிகழ்வுக்கு அடுத்து வளர்க்கத் தொடங்கினார்கள். எகிப்தும் மற்றொரு துருக்கியாக மாறுவது அமெரிக்காவுக்குத் தலைவலியாக அமையும். ஆனால் அது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கையில் சென்று சேர்வது பயங்கரக் கனவாக அமையும்.

வெகுநாட்களாக அரசியல்ரீதியாகவும் பொருளாதார வாய்ப்புகளின் அடிப்படையிலும் புறக்கணிக்கப்பட்டவர்களான அராபிய உலகின் குடிமக்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக எழுவார்கள் என்று யாரும் கருதியிருக்கவில்லை. ஆனால் துனிசியா வழியை காண்பித்து அராபிய உலகம் முழுவதும் நெருப்பலை ஏற்பட்டுள்ளது. இன்று சோவியத் யூனியன் உடைந்த நிகழ்வைப் போன்று வரலாறு திரும்பி அமெரிக்காவைப் பார்த்து புன்னகைப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதோ அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமான முறையில் தவறான காரணங்களைக் கூறி கொன்றுவருகிறது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளைக் கொல்வதைவிட அப்பாவி மக்களைத்தான் அதிகம் கொன்றுவருகிறது.  தற்போது அரபு உலக மக்கள் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்போது இதுகுறித்து பல கோடி டாலர் கேள்வி ஒன்று எழுகிறது. அரபு உலகில் புதிய அரசுகள் எழுவது தவிர்க்கமுடியாதவை என்றும் அவை அமெரிக்காவுக் கும் இஸ்ரேலுக்கும் ஆதரவாக இருக்காதென்பதையும் அந்த இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளுமா?

இதில் இந்தியாவுக்கும் ஒரு பாடம் உள்ளது. ஆப்கானிஸ் தானில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு நடத்தியதை கண்டனம் செய்யாமல் இருந்ததால், அரபு உலகில் இந்தியாவுக்கு எதிராக எழுந்த வெறுப்பை பாகிஸ்தான் புத்திசாலித்தனமாகச் சுரண்டிக்கொண்டது. தற்போதோ  அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதால் ஈரானுக்கு எதிராக நிலைப்பாடுகளை வெளிப்படையாக இந்தியா எடுக்கவேண்டி வருகிறது. அரபு உலகில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை இந்தியா பகிரங்கமாக ஆதரிக்கவேண்டும். அப்படி ஆதரிக்காவிட்டால் இந்தியா பல நண்பர்களை அரபு உலகில் இழக்கும். 

அரபு உலகம் இதுவரை மதத்தீவிரவாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் பிடியில் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தது. அரபு உலகம் எழுச்சிபெற இதுவே சரியான நேரம். அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரத்தை மட்டும் இந்தப் புரட்சி நீக்காது. உலகின் மற்றப்  பகுதி மக்களுடன் ஜனநாயகப்பூர்வமாக இணையும் சற்று தாராளவய மதிப்பீடுகள் மதத்தீவிரவாதத்தை இடம்பெயர்க்கும் எனவும் நம்பலாம். இதுபோன்ற  மாற்றம்தான் இந்தோனேசியாவிலும் நடைபெறுகிறது.  இதன்மூலம் நாகரிக மாற்றம் ஏற்படும்.


அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கசப்பான நேரம்
சவுரவ்குமார் ஷாஹி

இறுகமூடப்பட்ட கதவுக்குப் பின்புறம் உள்ளது சுதந்தரம்.
ரத்தம் கசியும் முஷ்டியால் உடைத்துத்தான் திறக்கமுடியும்
எகிப்திய கவிஞர் அஹ்மது ஷாவ்கி(1869-1932)

அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சியைப் பார்த்து, தவித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஈரானியப் புரட்சிக்கு இட்டுச்சென்ற  நாட்களும் சம்பவங் களும் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டெஹ்ரானில் இருந்த மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்கத் தூதரகங்களில் இருந்து அந்நாட்களில் அனுப்பப்பட்ட தந்தி வாசகங்களைப் படித்துப் பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும். “ஸ்திரத் தன்மையின் பிரதிநிதி" “ஸ்திரத்தன்மை நிலவும் தீவு" “கல்லைப் போன்ற உறுதியான ஆதரவு" ஆகிய வாசகங்கள் உளவுத்துறை தலைவர்களை பகல் கனவு காண வைத்துக் கொண்டிருந் தன.

 வாஷிங்டன் மற்றும் டெல்அவிவ் உளவுத்துறை தலைவர்களிடமிருந்தும் இப்போது இதைப்போன்ற செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன.  இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளும் அவர்களுடன் எகிப்தின் மிகச்சிறந்த புத்திசாலியுமான பெஞ்சமின் பென் எலிசரும் சேர்ந்து அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; எகிப்து இன்னமும் நம் கையில் உள்ளது போன்ற செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்ததை இஸ்ரேலிய நிபுணர் கிடியான் லெவி நினைவூட்டுகிறார்.

“அந்தப் பிராந்தியத்தில் நாங்கள் பிடிமானத்தை இழந்துவிட்டோம். மத்தியகிழக்கில் அமெரிக்கக் கொள்கைத் திட்டத்தைப் பொறுத்தவரை தீமையானது அல்ல. அவற்றின் இலக்குகள் புதுமையானவை. ஆனால் ஒரு முதியவரைப் போல அமெரிக்காவின் பரிசீலனை முறைமை காலாவதியானது. அதற்கு ஓர் அர்த்தமும் இல்லை.” என்கிறார் ராபர்ட் க்ரெனியர். இவர் முப்பது ஆண்டுகள் சிஐஏ அமைப்பில் இருந்தவர்.

மற்றொருபுறமோ முபாரக் தனது அரசின் உளவுத்துறைத் தலைவரான ஓமர் சுலைமானை தனக்குத் துணையாக நியமித்தபோது, அவர் இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இருவருக்குமே பொருத்தமாக இருந்தார். ஆனால் சுலைமானுக்கு எகிப்தில் உள்ள தெருவில் உள்ள நிலைமை தெரியாது என்பது குழந்தைக்கும் தெரியும். அப்படியெனில் அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? ஏனெனில் அவரைத் தவிர ஆள் யாரும் எகிப்தில் இல்லாததே காரணம். சுலைமான் தனது  பணி வாழ்க்கையில் அதிகாரி களை மேய்த்துப் பழகியவர். அத்துடன் அந்த அதிகாரிகளின் விசுவாசம் எவ்வளவு என்பதையும் சொல்லிவிடுவார். நாட்டின் பாதுகாப்பு அமைப்பினரை சரியான ஒழுங்குக்குக் கொண்டு வருவதுதான் அவரது முதல் வேலையாக எதிர்பார்க்கப்பட்டது.

எகிப்திய ராணுவமும் காவல் துறையினரும் ஆற்றிய பங்கு மிகவும் சுவாரசியமானது. “படையினரும், காவல்துறையினரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை அனைத்து வகுப்பினரும் சேர்ந்து நடத்துவதை விளங்கிக்கொண்டனர். முன்பு அடிப்படைவாதிகளையும் போராட்டக் காரர்களையும் துரத்துவது போன்ற நடவடிக்கையை எடுக்கமுடியாது. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் தங்கள் ஆரோக்கியத்துக்குத் தீமையாக முடியும்   என்பதைத்   தெரிந்துகொண்டனர். ஏனெனில் அரசு அடுத்த நாள் வரை நீடிக்குமா என்றே தெரியாத நிலை இருக்கிறது" என்கிறார் இப்பிராந்தியத்தில் சிஐஏவில் பணிபுரிந்த ராபர்ட் பேயர்.

 இதற்கு நடுவே மேற்கு நாடுகளின் அரசுகள் இந்த மக்கள் போராட்டத்தில் ஆட்சி கவிழுமானால் அடுத்ததாக, சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவராக இருந்த முகம்மது எல் பராடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவருக்கு எகிப்திய மக்களிடம் அத்தனை ஆதரவு இல்லை.  ராணுவத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில் இடைக்கால அரசு அமைந்தால் எல்பராடி தற்காலிகமான தலைவராக நியமிக்கப்படுவார். அவரைப்போன்ற ஆட்கள் மக்கள் செல்வாக்கும் அபாயமும் இல்லாதவர்கள் என்று தளபதிகளுக்குத் தெரியும்.

“நியாயமான தேர்தல் நடக்குமானால், முஸ்லிம் பிரதர்ஹுட்  அமைப்பே வெற்றிபெறும். இஸ்லாமிய கட்சியினர் போல இவர்கள் தீவிரநிலைப்பாடு டையவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் வெற்றிபெற்றால் இஸ்ரேலுடனான ராஜாங்க  உறவுகள்  குறித்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். அப்படி நடத்தப்பட்டால் பெரும்பாலான வாக்காளர்கள் ராஜாங்க உறவை ரத்துசெய்யச் சொல்வார்கள்" என்கிறார் க்வைன் டையர். இவர் அராபிய உலக நிபுணராக லண்டனில் வசித்து வருபவர்.

அராபிய அமெரிக்க எழுத்தாளரான இஸ்மாயில் காலிடியால் தனது ட்விட்டர் செய்தியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்துடனான தங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் ‘சிக்கலாகிவிட்டது’ என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளன. இதற்கு லெபனான், சிரியா, பாலஸ்தீன நாடுகள் ‘லைக்’ போட்டுள்ளன’ என்று குறிப்பிட்டார். நல்ல நகைச்சுவை. 


அதிகாரத்தின் மாறும் சமநிலை


ஹிலாரி லெவ்ரெட்


அமெரிக்காவின் சர்வதேச நிலைப்பாடு பல்வேறு வகைகளில் பிரச்னைக் குள்ளாகியுள்ளது.  மத்திய கிழக்குப் பகுதியில் இது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அங்கே அதிகாரம், அமெரிக்காவிலிருந்து ஈரான், துருக்கி மற்றும் அதன் கூட்டாளிகள் பக்கம்  சரிகிறது. இதனால் எகிப்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைப் போன்று, மற்ற அரேபிய நாடுகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்துடன் கொண்ட கூட்டணிக்காக பல்வேறு ராஜதந்திர பலன்களை அனுபவித்து வருகின்றன. அமெரிக்காவின் அறிக்கைகளுக்கு அடியில் உள்ள உண்மை இதுதான். எகிப்திய கூட்டாளியை மட்டம் தட்டிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத் தைப் போன்றே எகிப்து மக்களின் உரிமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஒரு சடங்குக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திலும் அமெரிக்கா உள்ளது.
தமக்கு முன்பிருந்த காண்டலீசா ரைஸ் போன்றே ஹிலாரி கிளிண்டனும் அராபிய நாடுகளில் அரசியல் மாற்றத்திற்கு ஆதரவான மக்கள் இயக்கங்கள் அமெரிக்காவுக்கு நல்ல செய்திதான் என்று கருதுவதாகவே தெரிகிறது. அந்த நாடுகள் தாராளவாத, ஜனநாயகப் பாதையில் வரும்போது அமெரிக்காவின் மதிப்பீடுகளைக் காப்பாற்றுவதோடு அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திர உறவுகளின் ஆயுளையும் நீட்டிக்கும் என்பதே கணிப்பாக உள்ளது. ஆனால் இந்த கணிப்புக்கு இன்னொரு பக்கம் அராபிய உலகில் ஏற்படும் அரசியல் மாற்றம் இஸ்லாமிய குடியரசுக்கு ஆதரவாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.

எகிப்திலும் அராபிய நாடுகளிலும் எவ்வளவு மாற்றங்கள் நடக்கும் என்பதை இனிதான் பார்க்கமுடியும். ஆனால், எகிப்து, துனிசியா அல்லது மேற்குக்கு ஆதரவான அராபிய நாடுகள் தனித்துவம் வாய்ந்ததாகவும் மக்கள் நலன்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்  என்பது எங்களது கருத்து. அந்த நாடுகள் ராஜதந்திரரீதியாக அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் பெரிய ஆர்வம் ஏதும் காட்டாது. அத்துடன் இஸ்லாமிய குடியரசுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்ளும். காண்டலீசா ரைஸ், தனது பதவிக்காலத்தில் 2006 இல் நடைபெற்ற பாலஸ்தீன தேர்தல்களின் முடிவை தவறாகக் கணித்துவிட்டார். லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் அல் ஹரிரீயின் படுகொலைக்குப் பிறகு, மேற்குக்கு ஆதரவான ஜனநாயகமாக அங்கு மாற்றும் முயற்சி தோல்வி அடைந்தது.

துனிசியா, எகிப்து மற்றும் ஏமனில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் அந்தந்த  சமூகங்களின்  எதிர்பார்ப்பு களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால்  லெபனானில் நடைபெறும் மாற்றம் இதைப் போன்றது என்று யாரும் சொல்வதில்லை. அமெரிக்க கருத்தாளர்களைப் பொருத்தவரையில் லெபனானில் நடக்கும் நிகழ்வுகள் மோசமான திருப்பங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் பிற அராபிய நாடுகளில் நடைபெறும் மாற்றங்கள் நம்பிக்கைக்குரியதாக உள்ளதாகக் கூறப்படுகின்றன.. ஹிஸ்புல்லா ஓர் அந்நிய சக்தியைப் போல தொடர்ந்து விவாதிக்கப் படுகிறது. அதனால்தான் லெபானிய சமூகம் பாதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

டெஹ்ரானில் அயதொல்லா செய்யது கடாமி "எகிப்து, துனிசியா, ஜோர்டன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் ஈரானின் இஸ்லாமியப் புரட்சியால் தூண்டப்பட்டவை" என்றும் வாதாடுகிறார். அத்துடன், “ஓர் இஸ்லாமிய மத்தியக் கிழக்கு என்பது இஸ்லாம், மதம் மற்றும் ஜனநாய கத்தின் அடிப்படையில் உருவாகிவருகிறது" என்றும் கூறியுள்ளதையும் கவனிக்க
வேண்டும்     
(ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பெர்சிய வளைகுடா விவகாரத் துறை இயக்குனராக அமெரிக்காவில் பணிபுரிந்தவர் ஹிலாரி லெவ்ரட். அத்துடன் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஐ.நாவுக்கும் ஆலோசகர்.)


எகிப்து புரட்சியின் உருவாக்கம்

இசாம் அல் அமீன்

நாடே ஸ்தம்பித்தநிலையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் எகிப்திய மக்களின் உறுதியான எதிர்ப்பும், கோபமும்கூட அதிபர் முபாரக்கை இன்னும் பதவியிலிருந்து அசைக்க முடியவில்லை. சவுதிஅரேபியா, லிபியா மற்றும் பாலஸ்தீனிய சர்வாதிகாரத் தலைவர்கள் அவருக்குத் தந்த ஆதரவும் அவரது உறுதிக்குக் காரணம். முதலில் இந்தப் போராட்டங்களின் தொடக்கநிலையில் அரசு ஆடிப்போய்தான் காணப்பட்டது. எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் ஆளுங்கட்சியில் உள்ள சிலபேர் மீதும் அதிகாரிகள் சிலரின் மீதும் பழிபோட்டன. அதிபரின் மகனும் அடுத்த வாரிசான ஜமால் முபாரக்கின் வலதுகரமாக இயங்கும் அகமது இஸ்சின் பதவிவிலகல் கோரிப் பெறப்பட்டது.

ஊழல் மூலம் கோடீஸ்வரரான ஹுசைன் சலீமின் பதவிவிலகலும் கேட்டுப் பெறப்பட்டது. இவர் முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் அதிபரின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருந்தவர். அவரிடமிருந்து 300 மில்லியன் டாலர் பறிமுதல் செய்யப்பட்டதாக துபாய் விமானநிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.
ஹுசைன் சலீம், தனியார் எரிபொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இயற்கை எரிவாயுவை இஸ்ரேலுக்கு விற்பதற்காக அந்நாட்டு குழுமத்தினருடன் இணைந்திருந்தார்.  இஸ்ரேல் வாங்கும் எரிபொருளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்கள் இஸ்ரேலுக்கு மானியம் தருவதாக 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘லெஸ் ஆப்ரிக்ஸ்’ பத்திரிகை தகவல் வெளியிட்டது. எகிப்திடமிருந்து 70 சதவிகிதம் தள்ளுபடியில் எரிவாயுவை இஸ்ரேல் வாங்குவதாக இஸ்ரேலிய செய்தித்தாளான ‘ஹாரட்ஸ்’ சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அம்பலப்படுத்தியது. ஆனால் இந்த ஊழலை முன்னாள் எகிப்திய பிரதமர் புறக்கணித்தார். அத்துடன் நாடாளுமன்றத்துக்கு இஸ்ரேலுடனான ஒப்பந்த விவரங்களைத் தெரிவிக்கவும் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அரசு மீது வழக்கு தொடரப் பட்டபோது,  நீதிமன்றத்தில் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

எகிப்து அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு பரஸ்பர நலன்களைக் கொண்டது. 2009 ஆம் ஆண்டு  ஜூன் மாதம், ஒபாமா எகிப்துக்கு வருகைதந்தார். இந்த வரலாற்று பிரசித்திபெற்ற பயணத்தில் பிபிசியிடம் பேசியபோது அதிபர் முபாரக், சர்வாதிகாரி அல்லவென்று பதில் கூறினார். இஸ்ரேலின் பாதுகாப்புக்காகத் தான் மேற்குநாடுகள் எகிப்து அரசை தொடர்ந்து ஆதரிக்கின்றன. எகிப்திய அரசு தனது சொந்த மக்களைத் தாக்கியதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அரசுத் தரப்போ யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நெடா அகா-சுல்தான் கொல்லப்பட்டபோது, பல மேற்கு நாடு அரசுகள் உடனடியாக ஈரானிய அரசுக்கெதிராக கண்டனங்களை விடுத்தன. ஆனால் பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான மக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ள நிலைமையில் யாருமே எதிர்வினை யாற்றவில்லை. இதுபோன்ற குற்றங்களைக் கண்டும் காணாமல் இருப்பது குற்றங்களை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு சமமானதாகும்.

கடந்த அறுபது ஆண்டுகளில் இஸ்ரேல் மற்றும் எண்ணை வளத்தின் அடிப்படையி லேயே அமெரிக்கா மத்தியகிழக்கு நாடுகளையும், முஸ்லிம் உலகத்தையும் பார்த்து வந்துள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஈரானை இழந்தது. அங்கே ஷாவின் ஆட்சி தொடர்ந்து நடப்பதற்காக துணைநின்றது. ஆனால் அதிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொண்ட தாகத் தெரியவில்லை.      
கட்டுரையாளர்,  மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய ராஜதந்திர நிபுணர்
நன்றி : The Sunday Indian

டிவி தொடர்களுக்கும் சென்சார் தேவை !

டிவி தொடர்களுக்கும் சென்சார் தேவைப்படுகிறது
‘‘செக்ஸ் விற்பனை யாகிறது" என்பது சினிமா உலகின் ஓர் எளிய உண்மை. இது இப்போது திரையுலகைத் தாண்டி நமது வரவேற்பறை வரை வந்துவிட்டது. தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் கார்ட்டூன்களிலும் இது வெளிப்படுகிறது.  பகல்பொழுதில் வெளியாகும் தொடர்களில் கூட ஆபாசமும் வன்முறையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.
பிக் பாஸ், ராக்கி கா இன்சாப் அல்லது எமோஷனல் அத்யச்சார் போன்ற செக்ஸ் தொடர்பான தொடர்களில் பல ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. மேலும் சென்சார் செய்யப்படாத காட்சிகள் இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. இவை வயது வித்தியாசமில்லாமல் பார்க்கப்படுகின்றன. அர்மனோ கா பலிதான் தொடரில் காட்டப்படும் அதீத வன்முறை பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன் தொலைக்காட்சி சென்சார் பற்றி அரசை சிந்திக்க வைத்துள்ளது. இப்போதைக்கு அந்த மாதிரியான ஒரு சென்சார் போர்டு இந்தியாவில் இல்லை. கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (ரெகுலேஷன்) சட்டத்திற்கு உட்பட்டே தொலைக்காட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவேண்டும். ‘ஏ' படங்கள் மற்றும் பிக் பாஸ் அண்ட் ரோடைஸ் போன்ற தொடர்கள் நள்ளிரவில் மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவேண்டும். ஆனால் பகல் நேரத்திலேயே அவை ஒளிபரப் பாகின்றன.

பல நாடுகளில் தொலைக்காட்சிக்கான வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டு, அவை மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சிங்கப்பூரில் சென்சார்ஷிப் ரெவ்யூ கமிட்டி, ஊடகங்களின் உள்ளடக்கத்தை முறைப்படுத்துவது குறித்து கொள்கைகளையும் வழிகாட்டிகளையும் உருவாக்குகிறது. பிரான்சில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட முறையாக்க அமைப்பு உள்ளது. அது அரசு    மற்றும் தனியார் தொலைக்காட்சி களை கண்காணிப்பதுடன் தொலைக்காட்சி களில் நீலப்படங்கள் ஒளிபரப்பாவதற்கு எதிரான முயற்சிகளையும் எடுத்துள்ளது. பிரிட்டனின் முறையாக்க அமைப்பு இரவு 9 மணிக்கு மேல் எதையும் ஒளிபரப்ப அனுமதி தருகிறது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகள் அமெரிக்க தொலைக் காட்சிகளைவிட செக்ஸ் மற்றும் வக்கிர வசனங்களில் மிஞ்சுகின்றன.
தொலைக்காட்சியைப் பார்த்து குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. பெற்றோர்களின் வழிகாட்டுதலும், சென்சாரும் இல்லாத நிலையில் குழந்தைகள் நிலை மேலும் மோசமாகிறது. பாஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை செய்த ஆராய்ச்சியில், வயதுவந்தவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள்  வளர்ந்த பின் அதிக பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர்  என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்தியாவில் தொலைக்காட்சிகளுக் கான சென்சார் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகிறபோது அவற்றின் ரேட்டிங் திரையில் காட்டப்படவேண்டும். இதன் மூலம் தங்கள் குழந்தைகள் என்னென்ன நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்பதை பெற்றோர் முடிவு செய்யமுடியும்.     

ஸ்ரே அகர்வால்  The Sunday Indian

Saturday 16 April 2011

தேர்தல் கமிசனை பாராட்டி இ.த.ஜ.பேனர்.

தமிழகத்தில் நடை பெற்ற அமைதியான தேர்தல் மக்களின் மனதில் தேர்தல் கமிசன் மேல் மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தி உள்ளது! இதை வரவேற்று மக்களின் மன நிலையை பிரதி பலிக்கும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் பல இடங்களில் பேனர் வைத்துள்ளது! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவல்லிக்கேணி கிளையை சேர்ந்த சகோதரர் அப்துல் கரீம் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த விஷயம் பத்திரிகைகள் உள்பட பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது! அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!

Friday 15 April 2011

முகத்திரைக்கு தடை: ஃபிரான்ஸ் கூறும் சட்டமென்ன?



ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது" என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.

இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. இந்த சட்டத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்திலுள்ள இந்த இரண்டு வகைகள்தான் :



இவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.

ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லாஹ்!

நன்றி :பயணிக்கும் பாதை.

Tuesday 12 April 2011

இந்தியாவில் விக்கிலீக்ஸ் கேபிள்களின் தாக்கம்

சமீபத்தில் ஆங்கில நாளிதழ் த இந்து தொடர்ந்து வெளியிட்ட விக்கிலீக்ஸ் கேபிள்களின் விளைவாக இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருவதாக வீக்கிலீக்ஸ் வலைதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸாஞ் லண்டனில் ஒரு        பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அண்ணா ஹஸாரேயின் தலைமையில் நடைபெற்று வரும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்ற ஒன்று மகாத்மா காந்திக்கு பிறகு நடக்கவில்லை என்றும், உலகின் பல நாடுகளில் விக்கிலீக்ஸ் வெள்ளியிட்ட கேபிள்கள் முன்னெப்போதும் ஏற்பட்டிராத பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் அக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
நன்றி : க. திருநாவுக்கரசு,The Sunday Indian
 படங்கள் : Right Way

Monday 11 April 2011

நம்பர் ஒன் அசத்தும் இலவச வாக்குறுதிகள்

தமிழகத் தேர்தல் களத்தில் திமுகவும் அதிமுகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை ஒருபுறம் அள்ளி வீச, மறுபுறம் அவர்களுக்கு சற்றும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள். இவர்களது வாக்குறுதிகளை கேட்டு பல இடங்களில் வாக்காளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஆர்.சார்லஸ் அம்பேத்கர் தனது தேர்தல் அறிக்கையில், “எனக்கு வாக்களித்தால் அனைத்து இலவசங்களுடன் தொகுதியில் அனைத்து செல்போன்களுக்கும் மாதம் ரூ.100இலவசமாக ரிசார்ஜ் செய்துதருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமாp மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சூசைமரியான் தனது தேர்தல் அறிக்கையில், “ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.ஒரு லட்சம் வட்டியில்லா கடன் வழங்குவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கண்ணையன் தன்னுடன் தேர்தலுக்கு பணிபுயும் அனைவருக்கும் 3 சென்ட் நிலம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளதோடு, வெற்றி பெற்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் தங்க காசு தருவதாக கூறி வருகிறார்.
இந்த அறிக்கைகளில் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு வாக்காளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் வாக்குறுதி சேலம் தெற்கு மற்றும் வடக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எம்..ஷாஜகான் என்பவரது தேர்தல் அறிக்கை தான். இவர் வெற்றி பெற்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் நேனோ கார், ஜெனரேட்டர் உட்பட 22 பொருட்கள் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தசஇயிடம் குறிப்பிடுகையில், “இரண்டு பெரிய கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. தேவையானவற்றை வழங்குவதாகவும் கூறவில்லை. இன்று எல்லோர் வீடுகளிலும் மிக்சி, கிரைண்டர், டிவி உட்பட அனைத்து பொருட்களும் உள்ளன. ஆனால் மின்சாரம் அடிக்கடி போய்விடுகிறது. அதனால் நான் வெற்றி பெற்றால் ஜெனரேட்டர் தருவதாக மக்களிடம் கூறியுள்ளேன். மேலும் இன்று கார் அத்தியாவசியமாகிறது. எனவே நேனோ கார் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தருவதாக கூறியுள்ளேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு இந்தக் கார் வழங்க முடியும். மேலும் நான் மின்வெட்டு காரணமாக மக்களுக்கு அம்மி கல், உரல் போன்ற மாற்று பொருட்களும் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் இவை எல்லாவற்றையும் நிச்சயம் வழங்குவேன்”’’ என்கிறார் சிரிக்காமல்..
நன்றி : The Sunday Indian

Saturday 9 April 2011

பணக்காரர்களை உருவாக்கும் ஏழைகள்

                                      வறுமையைப் பொறுத்தவரை சில உண்மைகள் உலகளாவிய பொதுமையைக் கொண்டவை. பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக்குவது ஏழைகளே. இது இந்தியாவிற்கும் பொருந்தும். இந்தியர்களில் பாதி பேர் அடிப்படை வசதி கள்கூட இல்லாது வறுமையில் வாடுகிறார்கள் என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்லிவிடலாம்.

அடிப்படை வசதிகள் பெறுவது குறித்த இவர்களது கனவுகள் நிறைவேறாது இருப்பதற்குக் காரணம் சுமார் 1,20,000 கோடீஸ்வரர்கள் (மக்கள்தொகையில் 0.01 சதவிகிதம்) வசம் மொத்த தேசிய வருமானத்தில் 30 சதவிகிதம் குவிந்திருப்பதே. மேலடுக்கிலுள்ள 10 சதவிகித மக்களைத் தவிர்த்துப் பார்க்கும் போது மீதமுள்ள  90 சதவிகிதம் மக்கள் மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ வேண்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கீழ்தட்டில் இருக்கும் மக்கள் தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியைச் செலவிடுகிறார்கள். ஏழைகளுக்கான திட்டங்கள் நூற்றுக்கணக்கில் போடப்பட்ட பிறகும் இதுவே நிலை. முதலாவதாக, குடிநீருக்காக பணக்காரர்களைவிட ஏழைகளே அதிகம் செலவிடுகிறார்கள். கிராமம் மற்றும் நகரம் என இரு பகுதிகளிலும் தண்ணீர் எடுத்துவரச் செலவிடும் நேரம் மற்றும் நகர்ப்புறங்களில் தண்ணீர் மாபியாக்களிடம் தண்ணீர் வாங்கச் செலவிடும் பணத்தின் அடிப்படையிலும் ஏழைகள் குடிநீருக்காக அதிகம் செலவிடுகிறார்கள்.

தங்களைவிட வசதியானவர்களுடன் ஒப்பிடுகிறபோது, ஏழைகள் அரிசிக்காக 1.2 மடங்கும், மருந்துகளுக்காக 10 மடங்கும், தண்ணீருக்கு 3.5 மடங்கும் அதிகம் செலவிடுகிறார்கள். எரிபொருட்களைப் பொறுத்தவரை (பெட்ரோல். டீசல்) பணக்காரர்களைவிட ஏழைகள் அதிகம் செலவிடுகிறார்கள். எரிபொருளின் விலை அனைவருக்கும் பொது என்றாலும் சராசரி தனிநபர் வருமானம் மற்றும் நுகர்வுத் தேவை ஆகிய அடிப்படைகளில் கணக்கிடுற போது ஏழைகள் எரிபொருட்களுக்காக அதிகம் செலவிடுகிறார்கள். சாதாரண நபரைவிட பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்கும் ஒருவர்,  தனது ஆடம்பர காருக்கான பெட்ரோலுக்குத்  தரும் விலைக்கும் ஓர் ஏழை விவசாயி தனது தண்ணீர் மோட்டாருக்கான பெட்ரோலுக்கு தரும் விலையும் ஒன்றே. இதுவே எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கும் பொருந்தும். நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணை லிட்டர் ஒன்றுக்கு ரூ.12.37. ஆனால் நாடெங்குமுள்ள ஐந்து லட்சம் நியாயவிலைக் கடைகளில் நடைமுறை விலை ரூ.25 என்கின்றன ஊடகச் செய்திகள். இதை நம்பித்தான் இந்தியாவில் சுமார் 16 கோடி ஏழைக் குடும்பங்கள் இருக்கின்றன.

கடன் பெறும் வசதியைப் பொறுத்தவரை வங்கிகளில் பணக்காரர்களுக்கு கடன் கிடைப்பது எளிதாக இருப்பதுடன், வட்டி குறைவாகவும் தரப்படுகிறது. ஏழைகள் கடனை திருப்பித்தர மாட்டார்கள் என்று வங்கிகள் கருதுவதால், அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயத்திற்காக கடன் பெறுவதைவிட காருக்காக கடன் பெறுவது மிக எளிது. ஆனால், ஏழைகளுக்கு அளிக்கப்படும் மைக்ரோ பைனான்ஸுட ன் ஒப்பிடுகிறபோது வங்கிகளில் பணக்காரர்கள் கடனை திருப்பித்தருவது  மிகக் குறைவு. ஏழைகளுக்காக மானியத்துடன் பல திட்டங் கள் அறிவிக்கப்பட்டாலும், யதார்த்தத்தில் அவற்றின் பலன்கள் சென்றடைவது வசதியானவர்களையே என்பது மிகப்பெரும் முரண்நகை. ஏழைகளுக்கான திட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகின்றன.     
நன்றி : பிரசூன் மஜூம்தார் , The Sunday Indian
படங்கள் : Rigth Way

புற்றுநோயின் தலைநகரம்

புகையிலை ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை 

இந்தியாவில் புற்றுநோயின் தலைநகரமாக மிசோரம் விளங்குகிறது. அம்மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2004 இல் புற்றுநோயின் காரணமாக 593 பேர் இறந்ததாகவும் (இது அம்மாநிலத்தில் நடந்த மொத்த மரணத்தில் 12.72%), 2005இல் அது 618 ஆக (மொத்த மரணத்தில் 13.18%) உயர்ந்ததாகவும் கூறுகிறது. 2006, 2007, 2008ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மொத்த மரணங்களில் புற்றுநோய் மரணங்கள் முறையே 12.82%, 13.08% மற்றும் 11.71%. எம்.பி.பி.சி.ஆர். என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை யின்படி, அம்மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 23.1% பேர் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஐஸ்வால் சிவில் மருத்துவ மனையின் நோய்க்குறியியல் துறையின் தலைமை மருத்துவர் எரிக் ஸோமாவியா கூறும் போது தொண்டை புற்றுநோய், நாக்குப் புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் ஆகியவற்றாலேயே மிசோரமில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். 2003 மற்றும் 2008 காலகட்டத்தில் மேலும் 6748 பேர்  புற்றுநோயால் பாதிக்கப்பட் டிருப்பது தெரியவந்ததாகவும், 3,302 பேர் புற்றுநோயால் இறந்ததாகவும்     எம்.பி.பி.சி.ஆர் தெரிவிக்கிறது. 2003&04இல் ஒரு லட்சம் பேரில் 194.5 ஆண்களும், 155.7 பெண்களும் புற்றுநோயின் தீவிர பாதிப்பிற்கு ஆளாகியிருப்பதாகவும்  2007&08இல் இது ஆண்களில் 180.0 ஆகவும், பெண்களில் 156.0ஆகவும் உயர்ந்துள்ளதா கவும் எம்.பி.பி.சி.ஆர் தெரிவிக்கிறது.


இந்த அளவிற்கு புற்றுநோய் அதிகரித்திருப் பதற்குக் காரணம் அம்மக்களின் வாழ்க்கை முறையே. அதிக அளவிலான புகையிலை நுகர்வு (புகைத்தல் மற்றும் மெல்லுதல்), புகையூட்டப்பட்ட இறைச்சியை அதிக அளவில் உட்கொள்ளுதல் ஆகியவை இதற்கான காரணங்களாகும். இதை ஐஸ்வால் சிவில் மருத்துவமனையில் புகையிலை தடுப்பு கிளினிக்கின் தலைமை மருத்துவர் ஜேன் ஆர் ரால்டே உறுதிபடுத்துகிறார். மிசோரமில் 22.1% பெண்கள் புகைப்பதாக அவர் கூறுகிறார். தேசிய அளவில் இது வெறும் 2.5%. வடகிழக்கில் உள்ள பிற மாநிலங்களிலும் நிலைமை நன்றாக இல்லை என்கிறார் தசஇ&யிடம் பேசிய டாக்டர் மிருண்மாய் பருவா. மிசோரமில் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆளாகும் நோயாளி களில் 40% பேர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக இவர் கூறுகிறார்.

நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர நடவடிக்கைகள் சிலவற்றை அரசு இம்மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டும். புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்துவது அதில் முதலாவதாகும். புகையிலை நுகர்வின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கை யும் எடுத்ததாகத் தெரியவில்லை. இம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரும் மிசோ தேசிய முன்னணியின் பிரபல தலைவருமான லால்டெங்கா புற்றுநோயால் மரணமடைந்தது ஆச்சர்யத்திற்குரியது அல்ல.     
அக்ரம் ஹக் | மார்ச 20, 2011 15:௦௮
நன்றி : The Sunday Indian

கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி!

மற்ற இயக்கத்தின் கிளை நிர்வாகிகள்   செய்யும் தவறுகளை கூட தங்கள் இணையத்திலும் , பத்திரிக்கையிலும் போட்டு கேவலப் படுத்தி அதன் மூலம் 'பார்த்தீர்களா நாங்கள் தான் பரிசுத்தவான்கள் என பறை சாற்றிக்கொள்ளும் இவர்கள் பரிசுத்தவான்கள் அல்ல ! அல்லாஹ் தான் ஒருவன் தான் பரிசுத்தவான் என்பதை மீண்டு நிரூபித்துள்ளான்.

ஏற்கனவே மாநில துணை பொது செயலாளர் பதவியில் இருந்த  கலீல் ரசூல் வீட்டில் வேலை செய்த பெண்ணிடம் தன வேலையை காட்டி அது காவல்துறை வரை சென்று  கைது செய்யப்பட்டு பின்னர் விஷயம் பத்திரிக்கைகளில்  எல்லாம் வந்ததும்
  ஊருக்கு உபதேசம் செய்யம் மேலப்பாளையம் நகர நிர்வாகியும் மேலாண்மை லுஹாவின் சீடரும் மஸ்தூர் ரஹ்மான் நிர்வாக கமிட்டி உறுப்பினருமான  சேப்பலி மைதீன் வெள்ளையடிக்க போன வீட்டில்   அடுத்தவன் மனைவியை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பல காலம் பாலியல் தொடர்பு வைத்து பின்னர் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து , விஷயம் தெரிந்து புகார் செய்து  போலீசில் மாட்டிக் கொண்டதும், அது  பத்திரிக்கைகளில்   வந்ததும், 
பரிசுத்த ஜமாத்தின் தாயிக்களை உருவாக்கும்   கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரியில் கூட்டு ஓரின சேர்க்கை  நடந்து எட்டு மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தும் பலனின்றி , கடைசியில் சைபுல்லாஹ் மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ,கல்லூரியை மேலப் பாளையத்திற்கு மாற்றியதும் , மேலப்பாளையத்தில் ஓரினச் சேர்க்கை நடை பெறவில்லை என உத்திரவாதம் தரமுடியமா? என சைபுல்லாஹ் போர்க்குரல் எழுப்ப , உத்தரவதமெல்லாம் தர முடியாது! அங்கும் நடக்கலாம் என பி.ஜே சொல்ல   அதை பொதுக்குழுவில் பேசி கேசட் எடுத்து அதையும் காசாக்கி   ஊர் சிரித்ததும், ஏற்கனவே அனைவரும் அறிந்தது! [பார்க்க கிளிக் செய்யவும்  ]
http://www.youtube.com/watch?v=n2N2hQbSCHY&feature=player_embedded#at=15

தற்போது இவர்களின் இன்னொரு நிறுவனத்திலும் இந்த அசிங்கம் நடந்துள்ளது! கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில்  இவர்களின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது! இங்கு ஒரு பத்து முதியவர்கள் இருந்து வருகிறார்கள் ! [இவர்களை காட்டி பல  லட்சம் வசூலிக்கப் படுவது வேறு விஷயம்]   இவர்களுக்கு பணிவிடை  செய்ய   இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வருகிறார்.  

இஸ்லாத்திற்கு வந்த இந்த பெண்ணோடு முதியோர் இல்லத்தின் பொறுப்பாளரும், மாநில நிர்வாகியுமான அப்துல் ரஜாக்  தவறான தொடர்பு வைத்துள்ளதாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள கணவர் கையும் களவுமாக கண்டு பிடித்து விசயத்தை மாநில நிர்வாகி தவ்பிக்கிடம் புகார் செய்ய தவ்பிக் சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல்  போனிலேயே அந்த பெண்ணின் கணவரை மிரட்டியுள்ளார்.


பெண்ணின் கணவர் நேரடியாக மாநிலத் தலைமையகம் வந்து புகாரை எழுத்துப் பூர்வமாக கொடுத்துள்ளார். விசயத்தை கேள்விப் பட்டு விசாரணை செய்த பி.ஜே.வை ' போனில் பேசியதை கணவர் பெரிசு பண்றார்' என்று அப்துல் ரசாக் கூற ' இரவில் அடுத்தவன் மனைவியோடு உனக்கென்ன பேச்சு?  என பி.ஜே கேட்க  ' நீங்கள் எங்க  ஊர் லீனாவிடம் கடலை போடுவதில்லையா? என 
காட்டமாக கேட்க,வேறு வழியின்றி  விசயத்தை மூடி மறைத்து இப்போது முதியோர் இல்லத்தை வேறு ஊருக்கு மாற்றுவதாக கூறியுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் முதியோர் இல்லத்தை மாற்றுவதால் என்ன பயன்?  இந்த    நிலையில்  இருந்து கொண்டு இவர்கள்  ஊருக்கு  ஒழுக்கத்தையும்,  மற்றவர்களுக்கு  மார்கத்தையும் போதிக்கிறார்கலாம் ! 
தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கருதிக் கொள்வோரை நீங்கள் 
பார்க்கவில்லையா? மாறாக அல்லாஹ் தான் நாடியோரை பரிசுத்தம் ஆக்குவான். [அல்குரான்]


தேர்தல் அதிகாரிகள் குடும்பத்துக்கு ஆபத்து : இந்தியதவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் பேட்டி!

"தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக,'' இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்.,13 தேர்தலை சீர்குலைக்க தி.மு.க., தயாராக உள்ளது. ஓட்டுச்சாவடிகளை கைவசம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் குடும்பத்தை சிறை வைத்து காரியம் சாதிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
காளிமுத்து ஆர்.டி.ஓ., விவகாரம் இதற்கு சரியான உதாரணம். நேரடி பேட்டி கொடுத்த ஒரு அதிகாரியை அடுத்த மூன்றாவது நாளில் மாற்றி பேச வைத்துள்ளனர். "தோல்வி அடைந்தாலும் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருப்போம்' என, கருணாநிதி கூறியிருப்பது, தொண்டர்களை தூண்டிவிடும் வேலை. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தை குவிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும். தி.மு.க.,வினரால் காங்.,அனைத்து இடங்களிலும் தோற்கும். சாதிக் பாட்ஷா இறப்பில் உளவுப்பிரிவு போலீசாருக்கு முழு பங்கு உண்டு.
சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டில் தான் அனைத்து ஊழலும் வெளிவருகிறது. மத்திய அரசு பொம்மையாக உள்ளது. புலிகள் பெயரை சொல்லி லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தனர், தமிழக மீனவர்களை அடித்து விரட்டினர். அப்போது அமைதியாக இருந்த கருணாநிதி, இப்போது சோனியாவிடம் கோரிக்கை வைக்கிறார். "இனி அவர்கள் சுடமாட்டார்கள்' என, சோனியா சொல்கிறார் என்றால், இவரது கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பது உறுதியாகிவிட்டது, என்றார்.
நன்றி;தினமலர்

தவ்ஹீத் வியாபாரி

திருவாளர் பிஜே சில நினைவூட்டல்கள்: 
                மார்க்க கல்விக்காக மதரஸாவில் சேர்ந்தும், மார்க்கத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் மளிகை கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தவர்.
              வாழ்வியல் தேவைக்காக அரசியல் கட்சி மேடைகளில் மேடைப் பேச்சாளராக அறிமுகம் ஆனவர்.                                                                                                           திராவிடர் கழக கொள்கையை ஏற்று இறை மறுப்பாளராக வலம் வந்தவர்.

இவ்வாறெல்லாம் இருந்தவர் தான் அல்லாஹ்வின் பேரருளால் 1980 களில் மதீனா சென்று கற்றுத் தேர்ந்த அறிஞர்களின் போதனையை ஏற்று இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் மீண்டு வந்தார்.

இங்கே, அன்னாரின் அடிப்பொடிகளால் ஒரு வினா தொடுக்கப்படலாம்.

அதாவது, 1980 களுக்கு முன் என்ன விதமான கொள்கையில் இருந்தாலும், 1980 களில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்குப் பிறகு ஏகத்துவத்தை முன்னெடுத்து சென்றவர் இவர் இல்லையா – என்று வினா எழுப்பலாம்.

அவர்கள் எடுத்து வைக்கும் தர்க்கமே அவர்களுக்கு போதுமான பதில் என்பதனைக்கூட உணர முடியாத அளவிற்கு தக்லீத் முற்றியவர்கள் என்பதால், நாமே விளக்க கடமைப்பட்டுள்ளோம். விளங்கிக் கொள்வதும், விளங்கிக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.அதாவது, இவர்களின் கூற்றுப்படி எந்த ஒரு மனிதனும், ஒரே நிலையில் இருக்க வேண்டியதில்லை. சமய சந்தர்ப்பம், அறிவு பொருளாதாரத்திற்கு ஏற்ப அவனுடைய நிலை மாறுபாடு அடையலாம். இதற்கு இவர்களது கதாநாயகனே மகச்சிறந்த எடுத்துக்காட்டு. 1980 களுக்கு முன்னால் இறை நிராகரிப்பு கொள்கையிலிருந்து 1980 களில் ஏகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தனது நிலையை மாற்றிக் கொண்டதோடு, பலர் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்ள காரணமாக இருந்தார் என இவரால் புகழாரம் சூட்டப்படுபவர்.

இதே அடிப்படையில் அமைந்த நமது கேள்வி என்னவெனில், 1980 களில் மாற்றங்களுக்கு வித்திட்டவர் அதற்கு பிறகு மாறவில்லை என்று எந்த தவ்ஹீதுவாதியாவது நெஞ்சில் கை வைத்து ???! செல்ல முடியுமா.

நிச்சயமாக ஒருவரும் சொல்ல முடியாது. அவ்வாறு சொல்பவர் எவரும் தவ்ஹீதுவாதியாக கூட இல்லை, சராசரி முஸ்லீமாகக் கூட இருக்க முடியாது.

ஏனெனில், 1980 களில் பலரின் தியாகத்தால் வளர்ந்த தவ்ஹீதை இன்று தனது லிமிடெட் கம்பெனியின் மூலதனமாக்கிக் கொண்டவர் தான் இவர்கள் ஏற்றிப் போற்றி புகழ்பாடும் ஆலிம் என்ற பெயரில் உலவி வரும் அபூஜெஹ்லின் வாரிசு.

மார்க்கத்திற்காக பல தியாகங்கள் செய்து, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரப்பிய அறிஞர்களை, லூசு என்றும், குருடன் என்றும் தரம் தாழ்ந்து விமர்சித்த மனநோயாளி.

இன்னும் ஒருபடி மேலே போய், உத்தம சத்திய ஸஹாபாக்களை கிரிமினல் என்றும், திருடன் என்றும் கொலைகாரன் என்றும் நா கூசாமல் விமர்சித்த சுயநலவாதி.

இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான ஜகாத்தை மறுத்த சந்தர்ப்பவாதி.

இஸ்லாமிய நம்பிக்கைகளில் ஒன்றான சுவர்க்கம் நரகத்தைப் பற்றி – அவைகள் படைக்கப்பட வில்லை என்று தர்க்கம் புரியும் குழப்பவாதி.

குர்ஆன் தர்ஜமா என்ற பெயரில் அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்புறப்படுத்த முயன்ற குழப்பவாதி.

சுயநலத்திற்காக பல அமைப்புகளை உடைத்து வெளியேறி இன்று தவ்ஹீதின் பெயரை பிராண்ட் நேம் ஆக வைத்து தொழில் நடத்தி வரும் தவ்ஹீத் வியாபாரி.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களைக் கொண்டே மார்க்கப் பிரச்சாரம் ???! நடத்தி வரும் ஒரிஜினல் அரசியல்வாதி.

பல பொய்களையும், அவதூறுகளையும் மறுமை பற்றிய அச்சமில்லாமல் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் இவர் யார் - என்று,

தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடத்தில் கேட்டால்,

நெஞ்சிலோ, தலையிலோ, வயிற்றிலோ கைவைக்காமல் தாமதமின்றி சொல்லி விடுவார்கள்

மேற்குறிப்பிட்ட அனைத்து தகுதிகளை (??!!) யும் ஒருங்கே பெற்று,
ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் நடத்தி வரும் திருவாளர் பிஜே தான் என்று தயங்காமல் சொல்லி விடுவார்கள்.

வல்ல அல்லாஹ் இந்த சமுதாயத்தை ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர்
நன்றி : Mannady Kaka மேலும் அறிய கிழே உள்ள முகவரியில் செக்கிடஉம்

உலகின் முதல் இயந்திர அடிப்படையிலான ஹிஜ்ரி நாட்காட்டி

                                  சந்திர கணக்கில் கணக்கிடப்பட்டு வரும் ஹிஜ்ரி நாட்டிகாட்டி அடிப்படையில் காலத்தை சரியாக கணக்கிட்டு காட்டும் முதலாவது கடிகாரம் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரியை அடிப்படையாக வைத்து தேதிகளை கணக்கிடும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தின் முன்னணி கடிகார உற்பத்தி நிறுவனம் ஒன்று இதனைத் தயாரித்துள்ளது.
ஜக்கிய அரபு எமிரேட்ஸ் கம்பனியொன்று கொள்முதல் செய்துள்ள இக்கடிகாரம் அபூதாபியல் பொது இடமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இக்கடிகாரத்தை உருவாக்க பல்லாண்டு பாடுபட்டதாக சுவிஸ் நிறுவனம் கூறுகின்றது.   மேலும் விபரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று பார்க்கவும்.
http://desktopd.com/swiss-made-muslim-lunar-calendar-based-watch-20101581.html

வக்பு வாரியங்கள்

வக்பு சொத்துகளை செயல்திறனுடன் நிர்வகிக்க மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவை
ஃபைசி ஓ. ஹாஷ்மி | ஏப்ரல் 3, 2011 17:21
பெருமளவு ஆக்கிரமிப்பு, முறைகேடு, கவனிப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள வக்பு வாரிய சொத்து களை நிர்வகிப்பது கவனத்துக் குரிய விஷயமாகியுள்ளது. இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. அதையும் சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு முன்பு முக்கியப் பங்கு வகிக்கும் சட்ட மற்றும் நிர்வாகரீதியான பலவீனங்களைப் பேசவேண்டும். இதனால் இந்த நாட்டிலுள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகள் அபிவிருத்தி செய்யப்படாமலேயே உள்ளன. வக்பு வாரியத்தின் அமைப்பு ஒழுங்கும் இதற்கு உதவவே இல்லை.
இரக்கமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து  இந்த  அமைப்பை உருவாக்கினார் கள். இதன் பயன்கள் அனைத்தும் மத, தர்ம மற்றும் கல்வி காரியங்களுக்குப் பயன் படவேண்டும்.
மைய அரசுச் சட்டப்படி வக்பு  சொத்துகள் மாநில வக்பு வாரியங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அது அரசியல்ரீதியான செயல்முறையில் நடக்கும். சிலசமயம் மாநில அரசு நியமிக்கும் ஒருவரால் நிர்வகிக்கப்படும்.
இந்த அமைப்பின் உடைமைகளை நிர்வகிப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்கள் கீழ்கண்டவாறு சுருக்கப் பட்டுள்ளன.
பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு: 1947 பிரிவினை ஏற்பட்டு பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்தபோது, அப்போது நகரங்களில் குடிபெயர்ந்த மக்கள் இந்த உடைமைகளை ஆக்கிரமித்தார்கள். அதற்குப் பின்னர் பல ஆண்டுகளுக்கு இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்த அமைப்பும் இல்லை.
அரசு மற்றும் அரசுசார் அமைப்புகளின் ஆதிக்கம்: அரசுத் துறைகளாலும் பல உடைமைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறைவான வாடகை அல்லது வாடகையே தராமல் இந்த அலுவலகங்கள் இயங்குகின்றன.
 குறைந்த வாடகை: பல ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகங் களாகவும் வீடுகளாகவும் பயன்படுத்தத் தொடங்கிய இடங்களுக்கு இன்னமும் மிகக் குறைவான வாடகையே தரப்படுகிறது.
வழக்குகள்: பல உடைமைகள் வழக்கில் உள்ளன. அவற்றிலிருந்து எந்த வருவாயும் வருவதில்லை.
பலவீனமான வாடகைதாரர் சட்டம்: இந்தச் சட்டம் வீட்டு உரிமையாளர்களைவிட வாடகைக்கு இருப்பவர்களுக்கே சாதகமாகத் திகழ்கிறது. அத்துடன் சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் சுமையும் அதிகமாக உள்ளது.
வக்பு சட்டத்தின் பிரச்னைகள்: 1) இந்தச் சட்டத்தின்படி நீண்டகால குத்தகை அனுமதிக்கப்படுவதில்லை. நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கப்படாவிட்டால் நல்ல லாபம் இருக்காது. 2) இந்த அமைப்பின் சொத்துகள் பொது இடங்கள் சட்டத்தின் கீழ்வருவதில்லை. 3) இதனால் கூடுதல் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை எஸ்டேட் அதிகாரியாக நியமித்து ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றலாம் 4) வக்பு சொத்துகளைக் கணக்கிட்டு ஆய்வு செய்யும் பணியை குறித்த காலத்தில் முடிக்க மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவரை நியமிக்க வேண்டும். 5) வழக்குகளை விசாரிப்பதற் காக மாநிலம்தோறும் வக்பு தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும்.
மனநிலையில் மாற்றம் தேவை
வக்பு சொத்துகளை வர்த்தக அடிப்படையில் லாபத்தைத் தருபவையாக மாற்ற புதுமையான  சிந்தனை அவசியமாக உள்ளது. நகரத்தில் உள்ள உடைமைகளைக் கொண்டு சில மாநிலங்களில் மிகப்பெரிய  முன்னேற்றம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் வருவாயில் கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்கல்வி மையங்களை முஸ்லிம் சமூகத்துக்கு உருவாக்கலாம். இதற்கு உதாரணங்களாக கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் உள்ளன. வட இந்தியாவில் உள்ள மனப்போக்கு மிகவும் பழைமையானது. இதனால் வர்த்தக நோக்கு இல்லாமல் உள்ளது.
மத்திய வக்பு சபைக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்து வலுப்படுத்தி மாநில வாரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் தேவை. நலிந்த வக்பு வாரியங்களை தூக்கி நிறுத்த கடன்களும் நிதியுதவிகளும் வழங்கவேண்டும்.  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். இந்த மாதிரியான சட்டரீதியான நிர்வாகரீதியான அபிவிருத்திகளால் மாநில வாரியங்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த முடியும்.       
(இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் எழுத்தாளருடைய சொந்தக் கருத்துகள்) 
நன்றி : The sunday Indian   

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி

     இந்தியாவில் இஸ்லாமிய வங்கி சாத்தியமே  H.அப்துர் ரகீப் அவர்களுடன் ஒரு நேர்காணல் 

இஸ்லாமிய வங்கி முறைக்கு தடையில்லை என்ற கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு  செய்தி கிடைத்தவுடன் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வரும் ICIF (Indian Centre for Islamic Finance) இயக்குனர் ஜனாப் H.அப்துர் ரகீப் (முன்னாள் மாநிலத்தலைவர், JIH TN) அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக இணையதள குழுவினர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இஸ்லாமிய வங்கி இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்ற அயராத முயற்சிகளுக்கு இடையில் நம்முடைய கேள்விகளுக்கு ஜனாப் H.அப்துர் ரகீப் அவர்கள் அளித்த பதில்கள்…
1. கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
வங்கி அல்லாத நிதி நிறுவனம் உருவாக்க கேரள அரசு ஒரு குழு உருவாக்கி ஆய்வு மேற்கொண்டது.  இஸ்லாமிய வங்கி முறையை மையமாக வைத்து செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது.  இதில் கேரள அரசிற்கு 11% பங்கு என்றும் அரசால் உருவாக்கப்பட்ட கேரள தொழில் அதிபர்களை கொண்ட குழுவிற்கு 89%  பங்கு என்றும் செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.
இதற்கு திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்களும், ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பின் திரு.பாபு ஆகிய இருவரும் எதிரிப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர்.  அதில் அவர்கள் இந்நிறுவனம் அரசியல் அமைப்பு சட்டம் பகுதி 27-க்கு முரணாக உள்ளது என்று வாதிட்டனர்.  இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.  விசாரணையின் முடிவில் கேரள உயர்நீதி மனற நீதிபதிகள் இஸ்லாமிய முறையில் செயல்படக்கூடிய கேரள நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி தடையை நீக்கியது.
இந்த தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.  மேலும் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு கொண்டு வரும் இம்முயற்சியின் ஒரு மைல்கல். அல்ஹம்துலில்லாஹ்.

2. இஸ்லாமிய வங்கி பற்றி உலக அளவில் மக்களிடம் என்ன கருத்து இருக்கிறது?
2008க்கு பிறகு மிக பெரிய பொருளாதார நெருக்கடியை உலகம் சந்தித்தது.  மிக பெரிய நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டன.  ஆனால் இஸ்லாமிய வங்கி முறையில் நடைபெற்ற நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை,  15% வளர்ச்சியையும் சந்தித்தது.  இது அனைவருக்கும் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியது.
போப் அவர்கள் கூறினார் உலக நாடுகள் இஸ்லாமிய வங்கி முறை பற்றி யோசிக்க வேண்டும் மேலும் முதலீடுகளை இஸ்லாமிய வங்கிக்கு செலுத்த ஆலோசனை வழங்கினார்.
இன்னும் குறிப்பாக 53 நாடுகளுக்கு மேலாக இம்முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.
இஸ்லாமிய வங்கி குறித்து உலக அளவில் பல்வேறு நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

3. இஸ்லாமிய வங்கி முறை மற்ற வங்கிகளைவிட சிறப்பானது எப்படி?
500 வருடங்களுக்கு மேலாக வட்டி இல்லாத வங்கி முறை எங்கும் இல்லை.  வட்டி சார்ந்த முறை தான் கடைப்பிடித்து வருகின்றனர்.  இன்றைய வங்கி முறைக்கும் இஸ்லாமிய வங்கி முறைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இன்றைய வங்கி முறையில் பணம் போடுபவர்க்கும், கடன் வாங்குபவர்க்கும் மட்டும் தான் லாபம், இழப்பு.  வங்கிக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.  ஆனால் இஸ்லாமிய வங்கியில் லாபம், இழப்பில் வங்கிக்கும் பங்கு உண்டு.
இன்றைய வங்கி முறையில் பணம் பெற ஏதாவது அடமானம் வைக்க வேண்டும். அல்லது யாராவது ஜாமின் வழங்க வேண்டும்.  ஆனால் இஸ்லாமிய வங்கி முறையில் யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம், முதலீடு செய்யலாம்.  ஏழை, நலிவுற்றவர்களும் பயன் பெறும் வகையில் இஸ்லாமிய வங்கி முறை உள்ளது.  இன்னும் இஸ்லாமிய முறையில் பயன்பெற்ற விவசாயிகள் இன்று நல்ல நிலைமையில் இருக்கும் அறிக்கை நம்மிடம் உள்ளது.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவது ஏழைகள் மேலும் ஏழைகளாவது இஸ்லாமிய வங்கி முறையில் சாத்தியமில்லை.   எல்லோரும் பயன் பெறும் முறை என்பது இதன் தனி சிறப்பு.
மேலும் இஸ்லாமிய வங்கி முறையில் முதலீடு, பணம் தூயமையான வகையில் பயன்படுத்த படுகிறது. பின்வரும் முறைகளை தீவிரமாக கண்காணிக்கிறது.
  • வட்டி அல்லாத முறைதான் என்பதை உறுதி செய்கிறது
  • சூதாட்டம், மது, ஆபாசம், ஆயுதம், மக்கள் மோசடி போன்றவற்றில் முதலீடு இல்லை
  • முதலீடுகள் எங்கு உள்ளது என்பதை தெளிவாக காண இயலும்
ஆனால் இன்றைய வங்கி முறையில் வட்டிக்கு முக்கியத்துவம், IPL போன்ற மிகப்பெரிய சூதாட்டம் என மக்களிடம் அதிக லாபம் என்ற நோக்கில் செயல்படுகிறது.  இம்முறையை அகற்றி ஒழுக்கம் சார்ந்த முறைகளை (Ethical Plan)மட்டும் இஸ்லாமிய வங்கி அனுமதி வழங்குகிறது.  ஆக பணத்திற்கு பணமே வியாபாரம் ஆகாது. பணத்தை ஏதாவது பொருளை கொண்டு தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முறையை இஸ்லாமிய வங்கி நடைமுறைப் படுத்துகிறது.

4. இஸ்லாமிய வங்கி குறித்து மத்திய அரசின் நிலை என்ன?
2005ல் திரு. ஆனந்த் சின்ஹா அவர்களின் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு உருவாக்கியது.  நாட்டில் இஸ்லாமிய வங்கி நடைமுறை சாத்தியம் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.  இஸ்லாமிய வங்கி முறை சாத்தியமற்றது.  FootBall க்கும் Cricket க்கும் உள்ள வேறுபாடு போன்றது இஸ்லாமிய வங்கி முறையும் நாம் பின்பற்றுவதும்.  இதை அமல்படுத்த பாராளுமன்றத்தில் வங்கி முறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.  ஆகவே இது சாத்தியமற்றது என்று அக்குழு கூறியுள்ளது.  ஆனால் அந்த அறிக்கை ஆதரமற்றது.  ஏனெனில் அதில் இஸ்லாமிய வங்கி குறித்த நிபுனர்கள் இல்லை.  மேலும் பல்வேறு இணையதளங்களை பார்த்து அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் அந்த அறிக்கையை பெற RBIஆளுநருக்கு கடிதம் எழுதினேன்.  ஆனால் அவர் இது தரமுடியாது என்று கூறினார்.  பிறகு Right to Information Act (RTI) மூலம் அந்த அறிக்கை கிடைத்தது.

5. இஸ்லாமிய வங்கி குறித்து மக்கள் மற்றும் மத்திய அரசிடம் செய்யப்பட்டு வரும் பணிகள் என்ன?
முதலில் மக்களுக்கு இஸ்லாமிய வங்கி குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். ஏனெனில் இஸ்லாம் என்ற பெயரை கேட்டவுடனே பயங்கரம், சரி வராது என்ற கருத்து நிழவுகிறது.  இன்னும் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் வட்டியில்லாத வங்கியா முடியாது என்ற கருத்தும் நிழவுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு நடவெடிக்கைகள் ICIF (Indian Centre for Islamic Finance) மூலம் செய்யப்பட்டு வருகிறது.
2008 ல் Planning Commission of India வரக்கூடிய காலங்களில் பொருளாதார மாற்றங்களில் எப்படி செயல்படுவது என்று திட்டமிட டாக்டர் ரகுராம் ராஜன் அவர்களின் தலைமையில் குழு அறிக்கை ஆய்வு செய்தது.  அவர்களை ICIF மூலம் சந்தித்து இஸ்லாமிய வங்கி முறையின் அவசியத்தை எடுத்துரைத்தோம். அக்குழு அவர்களது அறிக்கையில் 2 பகுதியில் இஸ்லாமிய வங்கி குறித்த அவசியத்தை சேர்த்துள்ள்னர்.   ஆனால் RBI அக்கருத்தை பெரிதாக எடுக்கவில்லை.  RBI ஆளுநர் மற்றும் இணைஆளுநரை அனுகினோம்.  அரசு தான் இஸ்லாமிய வங்கி குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினர்.  பிறகு மத்திய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜியை சந்தித்தோம்.  அவர் RBI க்கும் ICFIக்கும் இடையில் ஒரு குழு அமைத்து அதில் விவாதிக்க வழியமைத்து கொடுத்தார்.  இந்த வகையில் கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய வங்கி முயற்சிக்கு இன்ஷாஅல்லாஹ் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

6. Non-Banking System என்ற முறை இஸ்லாமிய வங்கி முறை இதில் அதிக முக்கியம் எதில் கொடுக்கிறீர்கள்?
உடனடியாக இஸ்லாமிய வங்கி முறை என்பது கடினம்.  முதலாவதாக இன்றைய வங்கி முறையில் இஸ்லாமிய வங்கி அடிப்படையில் வங்கிஅல்லாத நிறுவனத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.  உ.ம். அசைவ உணவகத்தில் சைவ உணவிற்கு ஒரு அறை என்ற வகையில் இஸ்லாமிய வங்கி முறைக்கு ஏற்பாடு செய்கிறோம்.  அதில் மக்கள் கண்டிப்பாக இஸ்லாமிய வங்கி முறையின் பலனை அறிவர்.
அடுத்த நடவெடிக்கையாக பாராளுமன்றத்தில் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மசோதவை நிறைவேற்ற ஹைதராபாத் M.P மூலம் பேசி கொண்டு இருக்கிறோம்.  ஆனால் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் மசோதா குலுக்கல் முறையில் தான் தேர்வு செய்யப்படும்.  நம்முடைய முயற்சி வெற்றி பெற துஆ செய்யுங்கள்.  இந்த மசோதா கொண்டு வரும் நேரத்தில் இஸ்லாமிய வங்கிக்கு ஆதரவாக பேச பல்வேறு நபர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறோம். இன்ஷாஅல்லாஹ் அடுத்த அவையில் கூட இஸ்லாமிய வங்கி பற்றி விவாதிக்க வாய்ப்பு உள்ளது.
வெளிநாட்டில் இருக்கும் நம்முடைய மக்கள் மூலம் பிரதமரையும் தொடர்பு கொண்டிருக்கிறோம்.
ஆக பிரதமர், அமைச்சர்கள், அறிஞர்கள், பொது மக்கள் என எல்லா தரப்பில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

7. இஸ்லாமிய வங்கி ஏற்பட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பங்கு என்ன?
இஸ்லாம் வட்டியை வன்மையாக கண்டிக்கிறது.  கொடுக்கவும், வாங்கவும் கூடாது என்கிறது.  ஆனால் மக்களிடம் வட்டியிலிருந்து  விலகி இருக்கும் நிலை ஏற்படவில்லை.
வட்டியின் பக்கம் நெருங்காதீர்கள் என்று வட்டியினால் ஏற்படும் கொடுமைகளையும், தீமைகளையும் மக்களுக்கு தெளிவுப்படுத்த மெளலானா மெளதூதி அவர்கள் வட்டி பற்றி புத்தகம் எழுதினார். முதன் முதலில் அந்த புத்தகம் தான் மக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
வட்டியில்லா வங்கி முறையை எப்படி அமல்ப்படுத்துவது என்பதற்கான புத்தகத்தை டாக்டர். நஜாத்துல்லாஹ்  சித்திகீ அவர்கள் எழுதினார்.  அது தான் முதல் வழிகாட்டியாக பின்பற்றப்படுகிறது.  இன்னும் டாக்டர். ஃப்ஸ்லுர்ரஹ்மான் ஃபரிதி, டாக்டர். அவ்ஷாத் பலர் இதறகாக போராடி இருக்கிறார்கள்.
செயல்ரீதியாக வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையை ஆரம்பிக்க அப்போதைய அமீரே ஜமாஅத் மெள. யூசுஃப் அவர்கள் முடிவெடுத்தார்கள்.  அதன் அடிப்படையில் 500 க்கும் அதிகமான வட்டியில்லா நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
கேரளாவில் வெற்றிகரமாக வட்டியில்லா நிறுவனங்கள் செயல்படுகிறது.  AICL என்ற அமைப்பு 10 வருடமாக சிறப்பாக செயல்படுகிறது.  இன்னும் அகில இந்திய அளவில் மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற முறையில் ஷஹுலத் மைக்ரோ ஃபைனான்ஸ் (Sahulath Microfinance) உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய வங்கி நடைமுறையில் வருவதற்கு கடுமையாக போராடி வருகிறது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!