டிவி தொடர்களுக்கும் சென்சார் தேவைப்படுகிறது

‘‘செக்ஸ் விற்பனை யாகிறது" என்பது சினிமா உலகின் ஓர் எளிய உண்மை. இது இப்போது திரையுலகைத் தாண்டி நமது வரவேற்பறை வரை வந்துவிட்டது. தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் கார்ட்டூன்களிலும் இது வெளிப்படுகிறது. பகல்பொழுதில் வெளியாகும் தொடர்களில் கூட ஆபாசமும் வன்முறையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.
பிக் பாஸ், ராக்கி கா இன்சாப் அல்லது எமோஷனல் அத்யச்சார் போன்ற செக்ஸ் தொடர்பான தொடர்களில் பல ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. மேலும் சென்சார் செய்யப்படாத காட்சிகள் இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. இவை வயது வித்தியாசமில்லாமல் பார்க்கப்படுகின்றன. அர்மனோ கா பலிதான் தொடரில் காட்டப்படும் அதீத வன்முறை பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன் தொலைக்காட்சி சென்சார் பற்றி அரசை சிந்திக்க வைத்துள்ளது. இப்போதைக்கு அந்த மாதிரியான ஒரு சென்சார் போர்டு இந்தியாவில் இல்லை. கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்ஸ் (ரெகுலேஷன்) சட்டத்திற்கு உட்பட்டே தொலைக்காட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவேண்டும். ‘ஏ' படங்கள் மற்றும் பிக் பாஸ் அண்ட் ரோடைஸ் போன்ற தொடர்கள் நள்ளிரவில் மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவேண்டும். ஆனால் பகல் நேரத்திலேயே அவை ஒளிபரப் பாகின்றன.
பல நாடுகளில் தொலைக்காட்சிக்கான வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டு, அவை மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சிங்கப்பூரில் சென்சார்ஷிப் ரெவ்யூ கமிட்டி, ஊடகங்களின் உள்ளடக்கத்தை முறைப்படுத்துவது குறித்து கொள்கைகளையும் வழிகாட்டிகளையும் உருவாக்குகிறது. பிரான்சில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட முறையாக்க அமைப்பு உள்ளது. அது அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி களை கண்காணிப்பதுடன் தொலைக்காட்சி களில் நீலப்படங்கள் ஒளிபரப்பாவதற்கு எதிரான முயற்சிகளையும் எடுத்துள்ளது. பிரிட்டனின் முறையாக்க அமைப்பு இரவு 9 மணிக்கு மேல் எதையும் ஒளிபரப்ப அனுமதி தருகிறது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகள் அமெரிக்க தொலைக் காட்சிகளைவிட செக்ஸ் மற்றும் வக்கிர வசனங்களில் மிஞ்சுகின்றன.

தொலைக்காட்சியைப் பார்த்து குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. பெற்றோர்களின் வழிகாட்டுதலும், சென்சாரும் இல்லாத நிலையில் குழந்தைகள் நிலை மேலும் மோசமாகிறது. பாஸ்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை செய்த ஆராய்ச்சியில், வயதுவந்தவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் வளர்ந்த பின் அதிக பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்தியாவில் தொலைக்காட்சிகளுக் கான சென்சார் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகிறபோது அவற்றின் ரேட்டிங் திரையில் காட்டப்படவேண்டும். இதன் மூலம் தங்கள் குழந்தைகள் என்னென்ன நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்பதை பெற்றோர் முடிவு செய்யமுடியும்.
ஸ்ரே அகர்வால் The Sunday Indian