Monday 28 November 2011

டாஸ்மாக் மதுக்கடை அகற்ற கோரி களம் இறங்கிய இந்திய முஸ்லிம் ஜமாஅத்


டாஸ்மாக் மதுக்கடை அகற்ற கோரி களம் இறங்கிய இந்திய முஸ்லிம் ஜமாஅத் பற்றி நாளிதழ் செய்திகள் உங்கள் பார்வைக்கு

Sunday 27 November 2011

பேரணாம்பட்டில் டாஸ்மாக் மதுக்கடையால் சாலைமறியல்

பேர்ணாம்பட்டு நகரில் பலதரப்பு மக்கள் ஒன்றுகூடும் இடமாக விளங்குவது நான்கு கம்பம், இதன் அருகில் அமைந்திருக்கும் tasmac மதுக்கடையால் பொதுமக்களுக்கு பல இடயுருகள் ஏற்படுகின்றன, இந்த மதுக்கடை அகற்றக்கோரி பல அமைப்புகள் முற்றுகை , கண்டன ஆர்பாட்டம், மனு என்று பட்டியல் நிண்டுகொண்டுள்ளது தவிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை, இந்தக்கடையில் மது அருந்த அரசு அனுமதி அளித்துள்ளதாக எந்த அறிக்கையும் வெளிவந்ததாக நமக்கு தெரியவில்லை என்றும்  பொதுமக்களுக்கு இடையுறு விளைவிக்கும் எந்த செயலையும் காவல்துறைதான் தடுக்கவேண்டும் என்றும்,  இங்கு பொது இடத்தில் மது அருந்துவதையும் மது பாட்டில்களை உடைப்பதும் பொது மக்களுக்கு இடையுறு விளைவிக்கும் செயலையும் தடுக்கும் விதத்தில் காவல் துறை அறிவிப்பு பலகை வைத்துவிட்டு மீறுபவர்களை காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர் அம்மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளத நகர காவல் நிலைய துணை ஆய்வாளர் இடம் உரிமையில் விசாரணை முறை விதிகள் 1980 விதி 80 (2  )கிழ் நினயுட்டல் நேரில் சார்பு செயப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் 27 /11 மதியம் இரண்டு மணியளவில் பள்ளி மாணவன் செல் போன் கடைக்கு சார்ச்சர் வாங்க சென்றவனின் காலில் உடைந்த பாட்டில் ஏறி காயமடைந்தான் ரத்தம் அதிக அளவில் வெளியேற அருகில் இருந்த பொது மக்கள் காவல்நிலையம் சென்று தகவல் சொல்ல காவல் நிலையத்தில் யாரும் கண்டுகொள்ளததால் கோபமடைந்த பொது மக்கள் மதுக்கடை முன்பு சாலை மறியலில் இடுபட்டனர் விபரம் அறிந்த காவல்துறை விரைந்து  வந்து பொதுமக்களிடம் ஏதும் இனி அசம்பாவிதம் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அறிவிப்பு பலகை வைக்கப்படும்  என்றும் சமரசம் செய்தனர், இத்தனை  இடையுருகள் ஏற்படுத்தும் இந்த மதுக்கடை இங்கிருந்து இடமாற்றம் செய்தால்தான் பொது மக்கள் நிம்மதியடைவர்கள் என்று ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துக்கொண்டனர் 

போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றியவன் ? திணறிய போலீஸ் !

பேர்ணாம்பட்டு 27 /11   போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றி பல கடைகளில் மோசடி
                   வேலூர் மாவட்டம்  பேர்ணாம்பட்டு நகரில் போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றி பல கடைகளில்  சுமார்  ருபாய் 15000 திர்க்குமேல்  பொருட்களாகவும் உணவு பண்டங்களாகவும் ஆய்வாளர் வங்கிவருசொன்னர் என்று கூறி கவல்நிலயத்திர்க்கு  யாரையாவது அனுப்புங்கள் என்று சொல்லி உடன்வருபவரை வேறு கடையில் பொருட்களை வங்கி அங்கு அமர்த்திவிட்டு சென்றுள்ளான். பொருட்களை கொடுத்த கடைக்காரர்கள் சிலமணி நேரமாகியும் கடைப்பையன் வரவில்லை என்று காவல்நிலையத்தில் சென்று கேட்க அப்படியாரையும் அனுப்பிவைக்கவில்லை என்று ஆய்வாளர் சொல்ல மற்ற கடைக்கர்களும் தாங்கள் ஏமாறிய கதைகள் சொல்ல ஒட்டுமத்த காவலர்களும் பேர்ணாம்பட்டு நகரம் முழுவதும் தேடியும் பிடிபடவில்லை 
போலீஸ் என்று மோசடிசெய்தவனை கண்டுபிடிக்குமா பேர்ணாம்பட்டு போலீஸ்.