Saturday, 17 September 2011

ஆம்பூர் துத்திப்பேட் அருகே இருச்சக்கற வாகனத்தை ஷேர் ஆட்டோ மோதி ஒருவர் பலி

                             ஆம்பூர் : 17/09 துத்திப்பேட் அடுத்து  NMZ கம்பெனி அருகில் முஷ்தாக் (20 ) என்பவர் ஓட்டிவந்த இருச்சக்கற வாகனத்தை அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மோதி படுகாயமடைந்தார், சிகிச்சைக்காக ஆம்பூர் G .H. மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்த மருத்துவர் பதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார் என்று அருவித்துள்ளர். ஆம்பூர் மற்றும் பேர்ணாம்பட்டு செல்லும் வழில் அதிக ஷு  கம்பெனிகள் உள்ளன, இதில் மட்டும் சுமார் 6000 மேல் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை செய்கின்றனர், துத்திப்பேட் மற்றும் பெரியவரிகம் இடையே 'C 'போன்ற குறுகிய வளைவு சாலை உள்ளது இதனால் எதிர்வரும் வாகனங்கள் தெரிவதில்லை, பல பேருந்துகள் செயல்பட்டாலும், ஒட்டுமொத்த நபர்களும் வேலைகளை முடித்துவிட்டு ஒன்றாக  கம்பனிகளில் இருந்து வெளிவருவதால் சேர் ஆடோக்கரர்கள் முந்திக்கொண்டு அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றுவதுமட்டும் அல்லாமல் அதிவேகமாக செல்கிறார்கள் இதுபோன்ற  சம்பவங்கள் பலமுறை நடைபெற்றும் பல உயிர்கள் இழந்தும் இங்குள்ள R.T.O.,S.H., மற்றும் காவல்துறையும் இதற்கான எந்த நிரந்திர தீர்வுக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்வில்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெருவிக்கின்றனர்.


-அப்துல்லாஹ்

Wednesday, 14 September 2011

அரக்கோணம் சித்தேரி ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

  சென்னை: அரக்கோணம்  சித்தேரி  ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெற்கு ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மீட்பு, உதவிப்பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறினார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.அமைச்சர் திரிவேதி விபத்து நடந்த இடத்தைப் பார்க்கவும் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறவும் புதன்கிழமை சென்னை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
மற்றும் விபத்து குறித்தும் பிற ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்தும் பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க உடனடியாக சிறப்புத் தகவல் மையம் சென்னை சென்ட்ரலில் திறக்கப்பட்டது. அவசரத் தொலைபேசி எண் 044 - 2535 7398 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.2 ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில் ஆகிய 2 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. காட்பாடி வழியாகச் செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டது.

அரக்கோணம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே ரயில்கள் மோதல்

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த விரைவு பாசஞ்சர் ரயில் மோதி பெரிய விபத்து நேரிட்டது. செவ்வாய்க் கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 9 பேர் இறந்தனர், 88 பேர் காயம் அடைந்தனர் என்று சென்னைக்கு நள்ளிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்டன, அதில் 3 பெட்டிகள் முழுமையாகச் சேதம் அடைந்தன. அரக்கோணத்திலிருந்து காட்பாடி செல்லும் பாசஞ்சர் ரயில் சிக்னலுக்காக சித்தேரி ரயில் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தது. சிக்னல் கிடைத்ததும் அது மெதுவாக நகரத் தொடங்கியது, அப்போது சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் விரைவு பாசஞ்சர் ரயில் அதே பாதையில் வேகமாக வந்து முன் ரயில் மீது மோதியது. இதில் முன் ரயிலின் 5 பெட்டிகளும் பின்னால் வந்த ரயிலின் 3 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால் ஏராளமான பயணிகள் ரயிலுக்குள் சிக்கிக் கொண்டனர்.இருட்டு, மழையால் பாதிப்பு: அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாமல் இருள் நிலவியதாலும் பலத்த மழை பெய்ததாலும் மீட்பு, உதவிப் பணிகளுக்கு பெருத்த இடையூறு ஏற்பட்டது.மீட்பு, உதவிக்குழுக்கள் விரைந்தன: விபத்து நடந்த சில நிமிஷங்களுக்கெல்லாம் அருகிலிருந்த அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்தும் சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் மீட்பு மற்றும் உதவிக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்தனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர்: விபத்து நடந்த தகவல் கிடைத்தவுடனேயே வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திர பாபு, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சுநீல்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு, உதவிப் பணிகளை ஒருங்கிணைத்தனர். தீயணைப்புத்துறையும் 108 ஆம்புலன்ஸ்களும் மீட்பு, உதவிப் பணிகளுக்கு உதவின.முதல்வர் ஆணை: விபத்துப் பகுதிக்கு உடனே செல்லுமாறு மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய்யை முதல்வர் ஜெயலலிதா பணித்தார். வேலூரிலிருந்து மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் டாக்டர்கள் குழு விரைந்தது.உடனடி சிகிச்சை: காயம் அடைந்தவர்கள் உடனடியாக அரக்கோணம், சென்னை அரசு பொது மருத்துவமனை, வேலூர் ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சை தரப்பட்டது.தேசியப் பேரிடர் நிவாரணக் குழுக்கள்: விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தேசியபேரிடர் நிவாரணக் குழுக்களும் சென்னை, பெங்களூரிலிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்டது.அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை மையத்திலிருந்தும் உதவிக்கு விரைந்தனர்.கூட்டம் அதிகம்: வேலூர், காட்பாடி செல்லும் இரு ரயில்களிலும் பயணிகள் அதிகம் இருந்தனர். செவ்வாய்க்கிழமை வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் பயணம் செய்தனர்.ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு: சென்னையிலிருந்து ஈரோடு, சேலம், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூர் செல்லும் பாதையில் இந்த ரயில் விபத்து நடந்ததாலும் மீட்பு, உதவிப் பணிக்கு குழுக்கள் விரைந்ததாலும் இந்தப் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும் புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.