Monday 28 November 2011

டாஸ்மாக் மதுக்கடை அகற்ற கோரி களம் இறங்கிய இந்திய முஸ்லிம் ஜமாஅத்


டாஸ்மாக் மதுக்கடை அகற்ற கோரி களம் இறங்கிய இந்திய முஸ்லிம் ஜமாஅத் பற்றி நாளிதழ் செய்திகள் உங்கள் பார்வைக்கு

Sunday 27 November 2011

பேரணாம்பட்டில் டாஸ்மாக் மதுக்கடையால் சாலைமறியல்

பேர்ணாம்பட்டு நகரில் பலதரப்பு மக்கள் ஒன்றுகூடும் இடமாக விளங்குவது நான்கு கம்பம், இதன் அருகில் அமைந்திருக்கும் tasmac மதுக்கடையால் பொதுமக்களுக்கு பல இடயுருகள் ஏற்படுகின்றன, இந்த மதுக்கடை அகற்றக்கோரி பல அமைப்புகள் முற்றுகை , கண்டன ஆர்பாட்டம், மனு என்று பட்டியல் நிண்டுகொண்டுள்ளது தவிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை, இந்தக்கடையில் மது அருந்த அரசு அனுமதி அளித்துள்ளதாக எந்த அறிக்கையும் வெளிவந்ததாக நமக்கு தெரியவில்லை என்றும்  பொதுமக்களுக்கு இடையுறு விளைவிக்கும் எந்த செயலையும் காவல்துறைதான் தடுக்கவேண்டும் என்றும்,  இங்கு பொது இடத்தில் மது அருந்துவதையும் மது பாட்டில்களை உடைப்பதும் பொது மக்களுக்கு இடையுறு விளைவிக்கும் செயலையும் தடுக்கும் விதத்தில் காவல் துறை அறிவிப்பு பலகை வைத்துவிட்டு மீறுபவர்களை காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர் அம்மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளத நகர காவல் நிலைய துணை ஆய்வாளர் இடம் உரிமையில் விசாரணை முறை விதிகள் 1980 விதி 80 (2  )கிழ் நினயுட்டல் நேரில் சார்பு செயப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் 27 /11 மதியம் இரண்டு மணியளவில் பள்ளி மாணவன் செல் போன் கடைக்கு சார்ச்சர் வாங்க சென்றவனின் காலில் உடைந்த பாட்டில் ஏறி காயமடைந்தான் ரத்தம் அதிக அளவில் வெளியேற அருகில் இருந்த பொது மக்கள் காவல்நிலையம் சென்று தகவல் சொல்ல காவல் நிலையத்தில் யாரும் கண்டுகொள்ளததால் கோபமடைந்த பொது மக்கள் மதுக்கடை முன்பு சாலை மறியலில் இடுபட்டனர் விபரம் அறிந்த காவல்துறை விரைந்து  வந்து பொதுமக்களிடம் ஏதும் இனி அசம்பாவிதம் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அறிவிப்பு பலகை வைக்கப்படும்  என்றும் சமரசம் செய்தனர், இத்தனை  இடையுருகள் ஏற்படுத்தும் இந்த மதுக்கடை இங்கிருந்து இடமாற்றம் செய்தால்தான் பொது மக்கள் நிம்மதியடைவர்கள் என்று ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துக்கொண்டனர் 

போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றியவன் ? திணறிய போலீஸ் !

பேர்ணாம்பட்டு 27 /11   போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றி பல கடைகளில் மோசடி
                   வேலூர் மாவட்டம்  பேர்ணாம்பட்டு நகரில் போலீஸ் என்ற பெயரில் ஏமாற்றி பல கடைகளில்  சுமார்  ருபாய் 15000 திர்க்குமேல்  பொருட்களாகவும் உணவு பண்டங்களாகவும் ஆய்வாளர் வங்கிவருசொன்னர் என்று கூறி கவல்நிலயத்திர்க்கு  யாரையாவது அனுப்புங்கள் என்று சொல்லி உடன்வருபவரை வேறு கடையில் பொருட்களை வங்கி அங்கு அமர்த்திவிட்டு சென்றுள்ளான். பொருட்களை கொடுத்த கடைக்காரர்கள் சிலமணி நேரமாகியும் கடைப்பையன் வரவில்லை என்று காவல்நிலையத்தில் சென்று கேட்க அப்படியாரையும் அனுப்பிவைக்கவில்லை என்று ஆய்வாளர் சொல்ல மற்ற கடைக்கர்களும் தாங்கள் ஏமாறிய கதைகள் சொல்ல ஒட்டுமத்த காவலர்களும் பேர்ணாம்பட்டு நகரம் முழுவதும் தேடியும் பிடிபடவில்லை 
போலீஸ் என்று மோசடிசெய்தவனை கண்டுபிடிக்குமா பேர்ணாம்பட்டு போலீஸ்.

Saturday 24 September 2011

முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்டோருக்கு கேடயம் அல்ல; கேடு : இராம.கோபாலன்

முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்டோருக்கு கேடயம் அல்ல; கேடு என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இரு ஊர்களில் தாழ்த்தபட்டோர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வருகிறார்கள் முஸ்லிம்கள். ஒன்று நெல்லிக்குப்பம், மற்றொன்று பேரணாம்பட்டு.


நெல்லிக்குப்பத்தில் சென்ற முறை பொது வேட்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் கூட்டணிக் கட்சிகளால் தேர்ந்தெடுக்கபட்டார் என்பதால் இந்தமுறை சுழற்சி முறையில் வருகிற தனித் தொகுதி அந்தஸ்தை விலக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர் முஸ்லிம்கள். அதுபோல பேரணாம்பட்டை சுழற்சி முறையில் தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்குவதை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.


பேரணாம்பட்டுத் தொகுதியில் நகரத்தில் மட்டும் சுமார் 22% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த ஊரில் கடந்த சுமார் 30 வருடங்களாக முஸ்லீம்களே நிறுத்தப்பட்டு வெற்றிபெற்று வந்துள்ளார்கள். இன்று சுழற்சி முறையில் இதனைத் தனித் தொகுதியாக்கி ஒரு தாழ்த்தப்பட்டவரை ஏற்க முஸ்லீம்கள் மறுக்கிறார்கள். இதனை இந்துக்கள் கட்சி சார்பை கடந்து நினைவில் நிறுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் முஸ்லீம் பெரும்பான்மையானால் என்ன நடக்கும் என்றும், முஸ்லிம்கள் தாழ்த்தபட்டோருக்கு கேடயம் அல்ல, கேடு என்பதை அந்த சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது
என்று இராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : இந்நேரம் 
 

நிகாப் அணிந்த பெண்களுக்கு அபராதம் -பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப் உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை மீறி நிகாப் அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதுவரை இவ்வாறு தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதி்ப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.