Thursday, 30 June 2011

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!

 நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில்  ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ் புக் பற்றி பாலியல் துஷ்பிரயோகம் அதிச்சி ரிப்போர்ட்!

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.

ஆம், புதிதாக வந்து உள்ளதுhttp://www.orgasmprofile.com/என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.என்கிற


எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும்.

ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!

          புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.

இக்கருவிகளைப் பயன்படுத்தி தொலைபேசிகள், மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பது சட்டப்படி குற்றம். மீறி அவற்றைப் பயன்படுத்தினால், இந்திய தொலைத் தொடர்பு சட்டத்தின் விதிகளை மீறிய குற்றமாகும். அதனால், அரசு மற்றும் தனியார் உளவு நிறுவனங்கள் அக்கருவிகளை தகவல் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுப் படி, மத்திய அரசின் கீழ் இயங்கும், புலனாய்வுத் துறை (ஐ.பி.,), "ரா', மத்திய பொருளாதார புலனாய்வுத் துறை (சி.இ.ஐ.பி.,) வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் தங்களிடம் உள்ள ஒட்டுக் கேட்புக் கருவிகளை, உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டி வரும்.

Sunday, 26 June 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.
பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

வாழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. வரவுக்குள் திட்டமிட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழுவதால் மாத கடைசியில் கடனுக்கு கையேந்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் விலை திடீரென்று சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது அவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.

சென்னையில் இதுவரை சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.352.35 ஆக இருந்தது. தற்போது ரூ.402.35 ஆக உயர்ந்துள்ளது. டெலிவரி சார்ஜையும் சேர்த்தால் ரூ.425 கொடுக்க வேண்டியதிருக்கும். கடுமையான விலை உயர்வை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள் பெண்கள்.

வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!

இனி வருடம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்குச் சாவடியில் புதிதாக அலுவலர்களை நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் பணியாளர்களுக்கு தேவையில்லாத பணிச்சுமை ஏற்பட்டது
இதை குறைப்பதற்காக ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம் தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நிலையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓக்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களிடம் சேர்த்தல், நீக்குதல், பெயர், முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றிற்கான 6, 7, 8, 8ஏ படிவங்கள் தேவையான அளவு அளிக்கப்பட உள்ளன.

எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த ஆண்டு ஜன.1ம் தேதி அடிப்படையாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். அதே போல் பெயர், முகவரி மாற்றம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் சம்பந்தமாகவும் விண்ணப்பிக்கலாம்.


இறந்தவர்கள் மற்றும் தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர்களின் பெயரும் உடனுக்குடன் நீக்கப்படும். இன்னும் ஒரு மாதத்திற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியையும் தொடங்க உள்ளனர். நிலையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மதிப்பூதியமும் தேர்தல் கமிஷனால் வழங்கப்பட உள்ளது.

கார்பரேட் சாமியார் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!

   சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.