Wednesday, 15 June 2011

பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைசாலை ஊழியர்கள் இப் பெண்கள் நால்வரையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி, 'சோதனை'யிட்டுள்ளனர். இதன்போது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாகத் தாம் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி மேற்படி பெண்கைதிகள் நால்வரும் மனங்குமுறியுள்ளனர்.
மேற்படி பெண் கைதிகளைச் சோதனையிட்ட பின் அவர்கள், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடி ஆக்கிரமிப்புச் சிறைக்காவலர்களால் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது.
இந்தத் 'தேடுதல் வேட்டை' சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது. பலஸ்தீன் பெண் கைதிகளின் சிறைக்கொட்டடி தலைகீழாகப் புரட்டப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் குற்றஞ்சாட்டியது போன்ற கைத்தொலைபேசியொன்று அங்கே காணப்படவில்லை.
தேடுதல் வேட்டை இடம்பெற்ற ஆறு மணிநேரமும் மேற்படி பலஸ்தீன் பெண்கள் நால்வரும் உண்ணவோ, தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆண்,பெண், சிறுவர் என்ற வேறுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமலும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாமலும் மிக நீண்ட காலம் பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் : இந்நேரம். காம்

ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்

கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.
ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.
ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் : இந்நேரம். காம்

Wednesday, 8 June 2011

ஆயுதமேந்தித் தாக்குவோம் என்ற ராம்தேவ்

டெல்லி: அடுத்த முறை நாங்கள் போராட்டம் நடத்தினால், ஆயுதமேந்துவோம். எங்களைத் தாக்குவோரைத் திருப்பித் தாக்குவோம். இதற்காக 11,000 பேர் கொண்ட படையை உருவாக்குவோம் என்று கூறியுள்ள பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அடுத்த முறை போராடும்போது வெறும் கையுடன் வர மாட்டோம். 11,000 ஆண், பெண்களைக் கொண்ட படையை உருவாக்குவோம்.
அடுத்து ராம்லீலா மைதானத்தில் ராவண லீலாதான் நடைபெறும். எங்களை யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் 20 ஆண்களையும், 20 பெண்களையும் தேர்வு செய்து அவர்களை ஊழலுக்கு எதிரான போர்ப்படையாக உருவாக்குவோம். இவர்கள் 35 முதல் 40 வயது கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களை படை போல தயாரிப்போம். இது ஒரு ராணுவம் போல செயல்படும் என்றார் ராம்தேவ்.
இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராம்தேவின் இந்தப் பேச்சை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இது தேச விரோத பேச்சாகும். இதுகுறித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே ஆயுதமேந்திப் போராடுவோம் என்று ராம்தேவ் கூறுகிறார். அவரை ஆதரிக்கும் பாஜக, இதை ஆதரிக்கிறதா என்பதை விளக்க வேண்டும். அதேபோல 2ம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார். இதுவும் கண்டனத்துக்குரியது. தற்போது மத்தியில் நடந்து வருவது சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு. இந்த அரசுக்கு எதிராக 2ம் சுதந்திரப் போரில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தகவல் : ஒன்இந்திய 
இவர்கள் ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இடுபட்டுள்ளனர்கள ? இல்லை உள்நாட்டு போருக்கான திட்டமா ? "காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம்" என்று  திக்விஜய் சிங் கூறினார். ஆனால் இவர்களின் இந்த அறிவிப்பு "வெளிப்படியான தீவிரவாதிகள் " என்பதை கட்டுகிறது, மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதை விட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், மேலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவேண்டும் , ஊழல்  இல்லா இந்தியாவை உருவாக்கவேண்டும் 
- அப்துல்லாஹ்

ஆபாசப்படம் பார்ப்போருக்கு அதிர்ச்சி தகவல்

இணையம் மட்டுமின்றி மொபைல்போன், பத்திரிகைகள், ஐபோட், சிடி, டிவிடி போன்றவற்றில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதிக அளவில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால், பிரிட்டன் ஆண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், மற்றும் கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒருவர் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும்,ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒருவர்,வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களைப் பார்க்கின்றனர். 4%பேர் வாரத்திற்கு 10 மணிநேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களைப் பார்க்கின்றனர். இவர்களே அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர்.

1,057 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 80% பேர் "X" தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றிலொரு பெண் இத்தகைய படங்கள் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Sunday, 5 June 2011

முஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.

அதேசமயம்,ஆயிசாவின் பிரேதத்தைப் பெறுவதற்காக மருத்துவமனை வந்திருந்த ஆயிசாவின் உறவினர்கள் அது ஆயிசாவின் உடலாக வழங்கப்பட்ட பிரேதத்தில் கையில் சுந்தரி சைன் என்று பச்சை குத்தியிருந்ததைக் கண்டு வாங்க மறுத்துள்ளனர்.


பிரேதக் கிடங்கு ஆவணங்களைச் சரிபார்த்த மருத்துவர்கள், சுந்தரி சைனின் கணவர் தவறுதலாக ஆயிஷாவின் உடலை தமது மனைவியின் உடலென்று ஒப்புக்கொண்டு அடையாளம் காட்டி, கையெழுத்திட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருவரின் பிரேதமும் 80 சதவீதத்திற்கும் மேலாக தீக்கிரை ஆனதால் முகம் மற்றும் உடல்முழுதும் பிளாஸ்திரியால் மூடப்பட்டிருந்ததால் சுனில் சைன் தவறுதலாக ஆயிஷாவின் உடலைச் சுந்தரியின் உடலாக அடையாளம் காட்டியுள்ளார்.


ஆயிசாவின் பிரேதத்தைக்கேட்டு மருத்துவமனை வளாகத்தில் சப்தமிட்ட உறவினர்களில் சிலர் சுந்தரி சைனின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். எனினும், ஆயிஷாவின் உடலைச் சுந்தரியின் உறவினர்கள் இந்து முறைப்படி ஈமக்கிரியை செய்துள்ளதாகத் தெரியவந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.


கொந்தளித்துப் போயிருந்த இரு பெண்களின் உறவினர்களிடமும் பேசிய காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவு குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் செய்ததைத் தொடர்ந்து ஆயிசாவின் உறவினர்கள் சோகத்துடன் கலைந்து சென்றனர்.
நன்றி : இந்நேரம்.காம்
தகவல் : அப்துல்லாஹ்  

யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்

சென்னை : ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொக்கலிங்கம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாலிப பருவத்தில் உள்ள ஆண், பெண்களை யோகா மற்றும் ஆன்மிக காதலில் பயிற்றுவிக்கும் Movement for Spiritual Integration in Absolute (MISA) மிசா எனும் இவ்வமைப்பு இந்தியா முழுவதும் தன் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மிசா அமைப்பு டென்மார்கில் நாதா எனும் பெயரிலும் அமெரிக்காவில் தாரா எனும் பெயரிலும் இந்தியாவில் சத்யா எனும் பெயரிலும் பதிவு செய்துள்ளது. இதன் ஆசிரியர்கள் டென்மார்க், ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதோடு இதன் தலைமை பயிற்றுவிப்பாளர்களான மிஹாய் ஸ்டோய்ன் மற்றும் அடினா ஸ்டோய்ன் ஆபாச படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தலைவரான ரோமானியாவை சேர்ந்த கிராகிரயன் பிவோலாரு ஆபாச படங்களில் நடித்ததற்காக பல முறை சிறைக்கு சென்றவர் என்பதோடு ஸ்வீடனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளவர்.
மிசா அமைப்பினர் நடித்துள்ள ஆபாச வீடியோக்கள் பற்றி கேட்கப்பட்ட போது அதன் தற்காலிக தலைவரான் மிஹாய் மிசா தன் சித்தாந்தத்தை பரப்பும் ஆரம்ப கட்ட பரிசோதனை முயற்சியே என்று பதிலளித்தார். எங்களின் ஆன்மிக தேடலின் உச்சகட்டம் சிவனையும் சக்தியையும் ஒன்று சேர்ப்பதே. அப்போது தான் மனிதன் உச்சபட்ச ஆன்மிக நிலையை அடைய முடியும் என்று கூறிய மிஹாய் இந்தியாவில் அதற்கான தேவை நிறைய இருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமானவர்கள் தம் அமைப்பில் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூர் போலி சாமியார்கள் ஏற்படுத்திய சீரழிவுகளிலிருந்தே தமிழகம் விடுபடாத நிலையில் இவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது தமிழக கலாசாரத்துக்கு நல்லத
நன்றி : இந்நேரம்.காம்
தகவல் : அப்துல்லாஹ்

Saturday, 4 June 2011

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........

தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிஸம்பர் மாதத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு.

இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
·        லெப்பை
·        ஸெய்யது
·        தக்கனி முஸ்லிம்
·        அன்ஸார்
·        ஷேக்
·        மாப்பிள்ளை
·        துத்திகோலா

 முக்கிய குறிப்பு:

     ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது "ஸாயிபு, பட்டாணி, ஷரீப், பரிமா"  என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
-முஹம்மது முனீர்

துணைத் தலைவர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்